CRICKET OVER 400 UMPIRES MATCH OFFICIALS SCORERS AND VIDEO ANALYSTS AWAIT PAYMENT FROM BCCI VJR
பிசிசிஐ 400-க்கும் மேற்பட்ட அம்பயர், மேட்ச் அதிகாரிகளுக்கு இதுவரை ஊதியம் கொடுக்கவில்லை - அதிர்ச்சி தகவல்
ஐபிஎல் 2021 தொடரை ஆறு மாதங்களுக்குள் நடத்த இந்திய கிரி்க்கெட் வாரியம் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் 400-க்கும் மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படமால் இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2021 தொடரை ஆறு மாதங்களுக்குள் நடத்த இந்திய கிரி்க்கெட் வாரியம் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் 400-க்கும் மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படமால் இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ரஞ்சி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடப்பாண்டு நடைபெறவில்லை. ரஞ்சி டிராஃபி கிரிக்கெட் வீரர்களுக்கு இதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. உள்ளூர் போட்டிகளில் ரஞ்சி டிராஃபியை தவிர்த்து விஜய் ஹாசரே, சையஸ் முஸ்டாக் அலி டிராஃபி மற்றும் பெண்கள் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்து.
இதனிடையே சையது முஸ்டாக் அலி டிராஃபி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தொடரில் பங்கேற்ற 400-க்கும் மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகள் மற்றும் வீடியோ ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. பொதுவாக போட்டி முடிந்த 3 நாட்களுக்குள் நடுவர்கள், போட்டி அதிகாரிகள் தங்களது ஊதியம் குறித்த பில்லை பிசிசிஐ நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். அடுத்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டுவிடும். ஆனால் இந்த முறை சையது முஸ்டாக் அலி டிராஃபி முடிந்து 2 மாதமாகியும் ஊதியம் கிடைக்கவில்லை என்றுள்ளனர்.
பிசிசிஐ பொது மேலளார் சபா கரீம் கடந்த ஆண்டு தனது பதவியிலிருந்து விலகினார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தது. இதையடுத்து மற்றொரு பொது மேலாளார் கே.வி.பி.ராவ் இந்த பொறுப்புகளை பார்த்து வந்தார். அவரும் கடந்த டிசம்பர் மாதத்துடன் தனது பதவியிலிருந்து விலிகி கொண்டார். இதனால் பிசிசிஐ-யிடமிருந்து பல பேருக்கு ஊதியம் வழங்கப்படமால் உள்ளது.
ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ கடந்தாண்டு 4000 கோடி ரூபாய் வருமானம் சம்பாதித்தது. ஆனால் முறையான அதிகாரிகளை நியமனம் செய்யாமால் இருப்பதால் உள்ளூர் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படமால் உள்ளது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பணிக்குழு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று ஒப்புதல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது தற்போது வரை வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது.