ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘இந்தியாவை ஒயிட் வாஷ் அடிப்பதுதான் எங்கள் இலக்கு’ - வங்கதேச பயிற்சியாளர் பேட்டி

‘இந்தியாவை ஒயிட் வாஷ் அடிப்பதுதான் எங்கள் இலக்கு’ - வங்கதேச பயிற்சியாளர் பேட்டி

வங்கதேச கிரிக்கெட் அணி.

வங்கதேச கிரிக்கெட் அணி.

இந்தியா - வங்கதேசம் இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை காலை 11.30 க்கு தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் செய்வோம் என வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதன் பின்னர் கடந்த புதனன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன், இந்திய அணி களம் இறங்கி விளையாடியது. இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி மீண்டும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி கடுமையான முயற்சிகளை வெற்றி பெற மேற்கொண்டது. இருப்பினும் நூலிழையில் வெற்றி கைக்கு எட்டவில்லை.

AUS VS WI TEST : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி….

இந்த நிலையில் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற, இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. இதற்கிடையே அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம் பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடைசி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட்வாஷ் அடிப்பதுதான் தங்களது இலக்கு என்று வங்கதேச அணியின் பயிற்சியாளர் மெக்டர்மோட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறாதது எங்களுக்கு கூடுதல் பலமாக அமையும். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை ரோகித் சர்மாவுக்கு உண்டு. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சற்று முன்கூட்டியே களத்தில் இறங்கி இருந்தால், அன்றைக்கு நாங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் குறைவாகவே அமைந்திருக்கும்.

FIFA WORLD CUP 2022 : காலிறுதியில் மோதும் அர்ஜென்டினா – நெதர்லாந்து… வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம்?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவை நாங்கள் ஒருபோதும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற விடாமல் தொடரை கைப்பற்றியது கிடையாது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்வது தான் எங்களுடைய இலக்காக கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - வங்கதேசம் இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை காலை 11.30 க்கு தொடங்குகிறது.

First published:

Tags: Bangladesh, Cricket, India