உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யாத, தேர்வுக்குழுவினரை அம்பதி ராயுடு சூசமாக விமர்சித்துள்ளார்.
12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடும் ஆலோசனைகளுக்குப் பிறகு கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.கே.பிரசாத் கூறுகையில், “அம்பதி ராயுடுவுக்கு சில வாய்ப்புகள் கொடுத்தோம். ஆனால், விஜய் சங்கர், பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என 3 பரிமாணங்களில் அசத்துகிறார். அதனால் அவருக்கு வாய்ப்பு அளித்தோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்காத கோபத்தில் அம்பதி ராயுடு தனது ட்விட்டரில், “உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காக, இப்போதுதான் புதிய 3டி கிளாஸ்களை ஆர்டர் செய்தேன்” என கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
பெங்களூருவின் பவுலிங் படுமோசம்... கலாய்த்த ஹர்திக் பாண்டியா!
சி.எஸ்.கே-வுக்கு கடல் கடந்து பெருகும் ஆதரவு... கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம்!
தல தோனியின் ஸ்டைலை பின்பற்றும் ரோகித் சர்மா!
அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!
பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.