Home /News /sports /

இந்த 2 வீரர்கள் இந்திய அணியில் இருந்தால் 400 ரன்களே போதாது என்று எதிரணியினர் நினைப்பர்- சேவாக்

இந்த 2 வீரர்கள் இந்திய அணியில் இருந்தால் 400 ரன்களே போதாது என்று எதிரணியினர் நினைப்பர்- சேவாக்

ரிஷப் பண்ட். பிரிதிவி ஷா டெஸ்ட் அணியில் முக்கியம் என்கி
றார் சேவாக்

ரிஷப் பண்ட். பிரிதிவி ஷா டெஸ்ட் அணியில் முக்கியம் என்கி றார் சேவாக்

ஸ்போர்ட்ஸ் 18 சேனலின் ஹோம் ஆஃப் ஹீரோஸ் நிகழ்ச்சியில் இந்திய அணியில் இந்த 2 பேட்டர்கள் இருந்தால் போதும் எந்த எதிரணியாக இருந்தாலும் 400 ரன்கள் இலக்கே போதாது என்று நினைப்பார்கள், அப்படிப்பட்ட அதிரடிப் புலிகள் இவர்கள் என்று முன்னாள் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    அதாவது பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் இருந்தால் போதும் இந்தியா உலக கிரிக்கெட்டை ஆளும் எனும் சேவாக், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் எதிரணியினர் 400 ரன்கள் எடுத்தாலும் போதாது என்றே கருதுவார்கள். அப்படித்தான் இந்த இரண்டு வீரர்கள் பேட் செய்து வருகிறார்கள் என்கிறார் சேவாக்.

    “டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் உற்சாகத்தையும் விறுவிறுப்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் பிரிதிவி ஷாவை உண்மையில் டீமில் எடுக்க வேண்டும். ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா இருந்தால் எதிரணியினர் 400 ரன்கள் போதாது என்று நினைப்பார்கள். அதே போல் ரிஷப் பண்ட் 20 ஒவர், 50 ஓவர் கிரிக்கெட்டில் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும்.

    குறைந்த ஓவர் போட்டிகளில் நாம் 50 அடிக்கவோ 100 அடிக்கவோ இறங்குவதில்லை, வேகமாக ரன்களை எடுக்க வேண்டும். எதிரணி யார், சூழ்நிலை பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. ரிஷப் பண்ட் 4-5 இடங்களில் இறங்கினால் பொறுப்புடன் ஆட வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலை அவருக்கு ஏற்படும். அதனால் ஓப்பனிங்கில் இறங்கினால் அவர் வெற்றிகரமான வீரராகத் திகழ்வார்” என்றார் சேவாக்.

    பிரிதிவி ஷா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிரடி சதம் எடுத்து டெஸ்ட் கரியரை தொடங்கினார். நியூசிலாந்தில் கிங் கோலி உட்பட அனைவரும் மூவிங் பந்தில் திணற கைல் ஜேமிசன் உட்பட்டோரை பிரிதிவி ஷா சிக்சர் உட்பட பவுண்டரிகள் விளாசி 3 அரைசதங்கள் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவர் கரியர் வழித் தவறிப் போனது.

    ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அளவுக்கு ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட்டுகளில் ஆடுவதில்லை என்பது அவர் மீதான பெருத்த ஏமாற்றமாக உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Prithvi Shaw, Rishabh pant, Virender sehwag

    அடுத்த செய்தி