இந்திய அணியின் ஓபனிங் கவலை அளிக்கிறது: ரவி சாஸ்திரி வருத்தம்!

கோலியுடன் (இடது) ரவி சாஸ்திரி (AFP)

தொடக்க வீரர்களின் செயல்பாடு மிகவும் கவலை அளிக்கிறது. முதல் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்றார் ரவி சாஸ்திரி.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரர்களின் செயல்பாடு கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இந்திய அணி, பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. முதல் 2  போட்டிகள் முடிந்த நிலையில் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

  indian cricket team
  இந்திய டெஸ்ட் அணி (BCCI)


  நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை. தொடக்க வீரர்களான முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த தொடக்க வீரர் பிரித்வி ஷா முழுமையாக குணமடையவில்லை. இதனால், தொடக்க வீரராக யாரை களமிறக்குவது என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  இதுகுறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், “தொடக்க வீரர்களின் செயல்பாடு மிகவும் கவலை அளிக்கிறது. முதல் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். அவர்களுக்கு போதிய அனுபவம் உள்ளது” என்று தெரிவித்தார்.

  KL Rahul bowled, கே.எல்.ராகுல்
  பெர்த் டெஸ்டில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் போல்டானார். (Images: AP)


  இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடிய மயங் அகர்வால், தொடக்க வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், 3-வது டெஸ்டில் அவரை களமிறக்குவது குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடிவு செய்யப்படும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: