முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை மகளிர் டி20 : தொடர் நாயகிக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்ற ஒரேயொரு இந்திய வீராங்கனை

உலகக்கோப்பை மகளிர் டி20 : தொடர் நாயகிக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்ற ஒரேயொரு இந்திய வீராங்கனை

இந்திய அணி

இந்திய அணி

நாளை இறுதிப் போட்டி கேப்டவுன் நகரில் உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கும் இந்திய நேரப்படி மாலை 6.30-க்கும் தொடங்கவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், தொடர் நாயகிக்கான தேர்வு பட்டியலில் ஒரேயொரு இந்திய வீராங்கனை மட்டுமே இடம்பெற்றுள்ளார். உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 10-ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் சுற்றின் முடிவில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியாவை வென்று ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை இறுதிப் போட்டி கேப்டவுன் நகரில் உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கும் இந்திய நேரப்படி மாலை 6.30-க்கும் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீராங்கனைக்கு தொடர் நாயகி விருது அளிக்கப்படவுள்ளது. இதற்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் லிஸ்டி உள்ளனர்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராக இருக்கும் ரிச்சா கோஷ், இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் அடித்த 47 ரன்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த தொடரில் 5 இன்னிங்ஸகளில் 2-இல் மட்டுமே அவர் ஆட்டமிழந்துள்ளார். ரிச்சாவின் ஸ்ட்ரைக் ரேட் 130-யை தாண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 168 ரன்கள் எடுத்திருக்கும் ரிச்சாவின் சராசரி 68 ரன்னாக உள்ளது. 19 வயதாகும் ரிச்சா கோஷ் இந்திய அணியின் சிறந்த ஆட்டக்காரராக வருவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். அவரைத் தவிர்த்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங், விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி உள்ளிட்டோரும் தொடர் நாயகிக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

First published:

Tags: Cricket