Home » News » Sports » CRICKET ON THIS DAY SEPTEMBER 9 1994 SACHIN TENDULKAR REGISTERS HIS MAIDEN ODI TON VJR

இன்று அதே நாள்... ஒரு நாள் போட்டியில் முதல் சதத்திற்காக 5 வருடம் காத்திருந்த 'மாஸ்டர் பிளாஸ்டர்'

26 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் கொலும்புவின் பிரேமதாசா மைதானத்தில் சச்சின் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இன்று அதே நாள்... ஒரு நாள் போட்டியில் முதல் சதத்திற்காக 5 வருடம் காத்திருந்த 'மாஸ்டர் பிளாஸ்டர்'
சச்சின் டெண்டுல்கர்
  • Share this:
'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் 1989-ம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் ஒரு நாள் போட்டியில் அவர் முதல் சதம் அடிக்க அவருக்கு 5 வருடங்களானது.

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். கிரிக்கெட்டில்  தகர்க்க முடியாத பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவம் ரசிகர்கள் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த நாள் இன்று. 26 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் கொலும்புவின் பிரேமதாசா மைதானத்தில் சச்சின் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்தியா - இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடைபெற்றது.


இந்த தொடரின் 3-வது போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அற்புதமான சதத்தால் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.



ஆஸ்திரேலிய பந்துவீச்சை மைதானத்தில் நான்கு புறமும் சச்சின் சிதற விட்டார். அவருக்கே உரித்தான ஸ்டைல்களில் பவுண்டரி மற்றும் சிக்சர்களால் ரன்மழை பொழிந்து ரசிகர்களை குதூகலமாக்கினார்.



சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் கண்ட முதல் நாயகன் என்ற வரலாற்று சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் அவர் 49 சதங்கள் விளாசி உள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வு பெற்றாலும் அவரது சாதனைகள் கிரிக்கெட் உ்ள்ள வரை அவரது பெயரை உச்சரிக்க வைக்கும்.

 
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading