தோனி தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..!

தோனி தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..!
மகேந்திர சிங் தோனி
  • Share this:
இந்திய அணிக்கு ஐசிசி-யின் 3 விதமான உலக்கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனியால் இந்த நாளை என்றும் மறக்க முடியாது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை தோனி பதிவு செய்த நாள் இன்று. கடந்த 2005 ஏப்ரல் 5-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 123 பந்துகளில் 148 ரன்கள் அடித்து அரங்கத்தையே அலற விட்டார். தோனி முதல் சதத்தை பதிவு செய்ய அவருக்கு 5 போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டது.

வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான தோனி முதல் போட்டியில் ரன்அவுட் முறையில் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். அடுத்த 2 போட்டிகளில் 12, 7(நாட் அவுட்) ரன்கள் மட்டுமே எடுத்தார்.


அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த தோனிக்கு அடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 3 ரன்களில் அவுட்டானார். தோனி 7வது வீரராக களமிறக்கப்பட்டு வந்த நிலையில் அவரை ஆரம்பத்தில் இறக்கலாம் என்ற முடிவை கங்குலி எடுத்தார். அதுவே தோனிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பாகிஸ்தான் உடனான 2வது ஒருநாள் போட்டி விசாகாப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த போட்டியின் 4வது ஓவரில் சச்சின் பெவிலியன் திரும்ப 3வது வீரராக தோனி களமிறங்கினார். வாய்ப்புக்காக ஏங்கியிருந்த தோனிக்கு அன்றையப் போட்டி மிகப்பெரிய விருந்ததாக அமைந்தது. சேவாக் உடன் பார்ட்னர்ஷிப்பில் 96 ரன்களும், டிராவிட் உடன் பார்ட்னர்ஷிப்பில் 149 ரன்களும் தோனி குவித்தார்.

123 பந்துகளை எதிர்கொண்ட மகேந்திரசிங் தோனி 15 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 148 ரன்கள் குவித்தார். 50 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 298 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணியின் இடதுக்கை வேகப்பந்து வீச்சாளர் நெக்ஹரா 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.இந்திய அணிக்காக 350 ஒரு நாள் போட்டிகள் விளையாடி உள்ள மகேந்திர சிங் தோனி 10 சதம் மற்றும் 73 அரைசதம் விளாசி மொத்தம் 10,773 ரன்கள் எடுத்துள்ளார். உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம் பெறாமல் உள்ள தோனி மீண்டும் எப்போது இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்பதே ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading