ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இதே நாளில் அன்று : 622 நிமிட பேட்டிங்.. 38 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்... 9 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டின் மிகப்பெரிய சாதனை

இதே நாளில் அன்று : 622 நிமிட பேட்டிங்.. 38 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்... 9 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டின் மிகப்பெரிய சாதனை

மேத்யூவ் ஹெய்டன்

மேத்யூவ் ஹெய்டன்

மேத்யூ ஹைடன் 2003-ல் இதே நாளில் டெஸ்டில் மிகப்பெரிய இன்னிங்ஸ் என்ற பிரையன் லாராவின் சாதனையை முறியடித்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான பெர்த் டெஸ்டில் ஹைடன் 380 ரன்கள் குவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பேட்ஸ்மேன்களின் உண்மையான சோதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவரின் அந்தஸ்து தானாக உயர்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவுக்கும் அப்படித்தான் நடந்தது. 1994 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஒரு இன்னிங்ஸ் மூலம் மிகப் பெரிய சாதனையை உருவாக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 375 ரன்கள் எடுத்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். இருப்பினும், அவரது சாதனை 9 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டது, அதை முறியடித்த பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன். அவர் 2003 இல் லாராவின் மிகப்பெரிய டெஸ்ட் சாதனையை முறியடித்தார். இந்த நாளில் அதாவது அக்டோபர் 10 அன்று ஜிம்பாப்வேக்கு எதிரான பெர்த் டெஸ்டில் 380 ரன்கள் எடுத்தார். இருப்பினும், 6 மாதங்களுக்குப் பிறகு, லாரா மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் எடுத்து தனது பெயரில் இந்த சாதனையைப் படைத்தார்.

  அப்போது ஹைடன் 437 பந்துகளில் 380 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 622 நிமிடங்கள் அதாவது 10 மணி நேரத்திற்கும் மேலாக பேட் செய்தார். ஹெய்டன் தனது இன்னிங்ஸில் 38 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹெய்டனின் முதல் முச்சதம் இதுவாகும். பெர்த் டெஸ்டின் முதல் நாளில் 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பிய ஹேடன், இரண்டாவது நாளில் மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ் என்ற லாராவின் சாதனையை முறியடித்தார்.

  Also Read : கேட்ச் பிடிக்க வந்த மார்க் வுட்.. கையை வைத்து தடுத்த மேத்யூ வேட் ? - என்ன தான் நடந்தது

  ஹெய்டனின் 380 ரன்களின் உதவியுடன் ஆஸ்திரேலியா பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்ஸை 6 விக்கெட்டுக்கு 735 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹெய்டன் தவிர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட்டும் சதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவ் வாக் மற்றும் டேமியன் மார்ட்டின் அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலியாவின் பெரிய ஸ்கோருக்கு பின் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, ஜிம்பாப்வே ஃபாலோ-ஆன் விளையாட, இரண்டாவது இன்னிங்சிலும் ஜிம்பாப்வே அணியால் 321 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  லாராவின் மிகப்பெரிய சாதனை சில மாதங்கள் மட்டுமே ஹெய்டனர் வசமிருந்தது. அந்த சாதனையை மீண்டும் லாரவே தன்வசப்படுத்தினார். ஆம் லாரா 6 மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 2004 இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் எடுத்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Cricket