Home /News /sports /

மறக்க முடியுமா?36 ஆல் அவுட்டுக்குப் பிறகு இந்திய அணியின் மெல்போர்ன் எழுச்சி வெற்றிநாள் இன்று

மறக்க முடியுமா?36 ஆல் அவுட்டுக்குப் பிறகு இந்திய அணியின் மெல்போர்ன் எழுச்சி வெற்றிநாள் இன்று

இதே நாள் டிச.29- மெல்போர்னில் எழுச்சி பெற்ற நாள், வெற்றி பெற்ற தினம்

இதே நாள் டிச.29- மெல்போர்னில் எழுச்சி பெற்ற நாள், வெற்றி பெற்ற தினம்

2018-ல் ஆஸ்திரேலியா தொடரின் போது வார்னர், ஸ்மித் இல்லை என்பதால் இந்திய அணி 2-1 என்று முதன் முதலில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது, ஆனால் 2021-ல் வார்னர், ஸ்மித் வந்தனர், ஆஸ்திரேலிய பவுலிங்கும் ஸ்ட்ராங் ஆனாலும் அடிலெய்டில் 36 ஆல் அவுட்டுக்குப் பிறகு தொடரை வெல்ல வித்திட்ட மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி எழுச்சி நாள் டிசம்பர் 29ம் தேதிதான்.

மேலும் படிக்கவும் ...
2018-ல் ஆஸ்திரேலியா தொடரின் போது வார்னர், ஸ்மித் இல்லை என்பதால் இந்திய அணி 2-1 என்று முதன் முதலில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது, ஆனால் 2021-ல் வார்னர், ஸ்மித் வந்தனர், ஆஸ்திரேலிய பவுலிங்கும் ஸ்ட்ராங் ஆனாலும் அடிலெய்டில் 36 ஆல் அவுட்டுக்குப் பிறகு தொடரை வெல்ல வித்திட்ட மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி எழுச்சி நாள் டிசம்பர் 29ம் தேதிதான்.

இந்த ஆண்டின் சிறந்த மீட்டெழுச்சி என்று இதைக்கூறலாம், இப்போது ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் என்ன பாடுபடுகிறது என்று பார்க்கும் போது இந்திய அணி 2021 டெஸ்ட் தொடரை 36 ஆல் அவுட்டுக்குப் பிறகு 2-1 என்று வென்றது அரும்பெருஞ்சாதனையே.

விராட் கோலி அடிலெய்ட் தோல்வியோடு நாடு திரும்பிய நிலையில் ரகானேயிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டது. 36 ஆல் அவுட் என்ற இந்திய அணியின் ஆகக்குறைந்த் டெஸ்ட் ரன்களுக்கு அவுட் ஆன பிறகே இந்தியாவுக்கு ஒயிட் வாஷ்தான், 4-0 தான் என்றும் இன்னும் பலவிதமாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டலடித்தன. முன்னாள் வீரர்கள் வெந்த புண்ணில் உப்பைத் தடவினர்.

112 ரன்களை மெல்போர்னில் விளாசிய வெற்றி நாயகன் ரகானே


ஷுப்மன் கில், முகமது சிராஜ் அறிமுகமான இந்த பாக்சிங் டே டெஸ்ட் நமக்கு புல்லரிக்கும் பல தருணங்களை கொடுத்த மிக அருமையான டெஸ்ட் போட்டி என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. டாஸ் வென்ற டிம் பெய்ன் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். தொடக்க வீரர் பர்ன்சை பும்ரா டக் அவுட் ஆக்க. மேத்யூ வேட்(30) விக்கெட்டை அஷ்வின் காலி செய்தார்.

மார்னஸ் லபுஷேன் 48 ரன்கள் எடுத்து நன்றாக ஆடினார். ஆனால் அறிமுக பவுலர் சிராஜ் வீச அவருக்கு ரகானே லபுஷேனுக்கு ஷார்ட் லெக் பீல்டராக ஷுப்மன் கில்லை நிறுத்த சிராஜ் வீசிய பந்தை பிளிக் செய்தார் லபுஷேன், ஷுப்மன் கில் லபக்கென்று பிடித்தார், மிக அருமையான உத்தி. அஸ்வின் மிகப்பிரமாதமாக வீசி ஸ்டீவ் ஸ்மித்தை லெக் கல்லியில் கேட்ச் ஆகுமாறு வீசி டக் அவுட் செய்ய, டிராவிஸ் ஹெட் மட்டுமே 38 ரன்கள் எடுக்க, 195 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது. பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட். சிராஜ் 2 விக்கெட்.

ரகானே அற்புதமான சதம்:

இந்தியா இறங்கிய போது மயங்க் அகர்வால் ஸ்டார்க் பந்தில் எல்பி.ஆகி டக் அடித்தார். ஷுப்மன் கில் பேட்டிங் ஒரு ரெவலேஷனாக அமைந்தது 8 அருமையான பவுண்டரிகளுடன் 45 ரன்களில் கமின்ஸிடம் ஆட்டமிழந்தார். புஜாராவும் 17 ரன்களில் கமின்சிடம் வெளியேற, ஹனுமா விஹாரி 21 ரன்னுக்கு லயனிடம் இரையானார். ரிஷப் பண்ட் 29 ரன்களுக்கு நன்றாக ஆடினார் ஆனால் ஸ்டார்க்கிடம் வீழ்ந்தார். ரகானேயும் ஜடேஜாவும் இனைந்து 121 ரன்களைச் சேர்த்தனர்.ரகானே 223 பந்துகளை சந்தித்து 112 ரன்கள் விளாச, ஜடேஜா 57 ரன்கள், அஸ்வின் 14 ரன்கள் பங்களிப்பு செய்ய இந்தியா 326 ரன்கள் குவித்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கிய போது தொடக்க வீரரான மேட் வேட் 40 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார், பும்ரா மிகப்பிரமாதமாக ஸ்மித்தை பவுல்டு செய்தார். சிராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா 200 ரன்களுக்குக்காலியானது.

இதையும் படிங்க: ஜூனியர் ஆசியக் கோப்பை: பாதி ஆட்டத்தில் கொரோனா பாசிட்டிவ்- ஆட்டமே ரத்து

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 70 ரன்கள். மீண்டும் மயங்க் அகர்வால் சொதப்பி ஸ்டார்க்கிடம் வெளியேறினார், ஆனால் ஷுப்மன்க் கில் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுக்க, புஜாரா மீண்டும் 3 ரன்னில் சொதப்ப, ரகானே இறங்கி மீண்டும் 27 ரன்களை வின்னிங் ஷாட்டுடன் அடித்தார், இந்தியா 70/2 என்று தொடரை சமன் செய்து, பிறகு சிட்னியில் பெயினுக்கு பெய்ன் கொடுத்து 406 ரன்கள் இலக்கை விரட்டி விடுவோம் என்று அச்சுறுத்தி கடைசியில் விஹாரி, அஸ்வின் டிரா செய்தனர், கடைசியில் பிரிஸ்பனில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது. மெல்போர்ன் வெற்றி நாளான இந்த நாளை மறக்க முடியுமா?
Published by:Muthukumar
First published:

Tags: Ajinkya Rahane, India vs Australia, Melbourne

அடுத்த செய்தி