Home /News /sports /

25 பந்துகளில் 124 ரன்கள்- ரோகித் சர்மாவின் காட்டடியில் இலங்கை சிக்கியது இன்றுதான்

25 பந்துகளில் 124 ரன்கள்- ரோகித் சர்மாவின் காட்டடியில் இலங்கை சிக்கியது இன்றுதான்

ரோகித் சர்மா 3வது இரட்டை சதம் அடித்த நாள் இன்று.

ரோகித் சர்மா 3வது இரட்டை சதம் அடித்த நாள் இன்று.

இந்த ஆட்டத்தின் நாயகன் ரோகித் சர்மா, இன்னொரு விஷயம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானதும் இதே போட்டியில்தான்.

    2017 டிசம்பர் 13ம் தேதி, அதாவது இன்றைய தினத்தில் அன்று ஹிட் மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 3வது ஒருநாள் இரட்டைச் சத சாதனையை எட்டினார். இதில் 13 பவுண்டரிகள் 12 சிக்சர்கள், அதாவது 25 பந்துகளில் 124 ரன்கள் விளாசி உலகை திரும்பிப் பார்க்க வைத்த ரோகித் சர்மா 208 ரன்கள் குவித்தார்

    இலங்கை அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியது, இதில் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வென்றது. இதில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக கடுப்பில் இருந்தது, இலங்கையை புரட்டி எடுக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அனைவருக்கும் ஒரு வெறி கிளம்பியிருந்த சமயம், ஆனால் அது ரோகித் சர்மாவின் வெறித்தனமான ஆட்டமாக அமைந்து மொஹாலி மைதானம் நெடுக நம்மை ஓட விடுவார் என்று இலங்கை அணி நினைக்கவில்லை.



    இதே 13ம் தேதி, நவம்பர் மாதம், ஆனால் 2014ம் ஆண்டு கொல்கத்தாவில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய ஹிட் மேனின் புயலில் சிக்கி சின்னாபின்னமாயினர் இலங்கை அணியினர். இலங்கையுடன் 264 ரன்களை ஒருநாள் போட்டியில் விளாசினார் இந்த இன்னிங்சில் 225 பந்துகளில் 33 பவுண்டரி 9 சிகர்களை விளாசியிருந்த ரோகித் சர்மா உலக சாதனை ஸ்கோரை எட்டினார் இனி யார் இதை உடைக்க முடியும்.

    அதே 13ம் தேதி டிசம்பர் மாதம், இம்முறை 2017-ம் ஆண்டில் மொஹாலியில் ஹிட்மேன் ரோஹித்தின் சிக்சர் மழையில் சிக்கி மைதானம் நெடுக ஓடிய இலங்கை வீரர்கள் நிச்சயம் நினைத்திருப்பார்கள் மைதானத்தில் ஓடிய ஓட்டத்தை சாலையில் ஓடியிருந்தால் இலங்கைக்காவது போய்ச்சேர்ந்திருக்கலாம் என்று. ஆகவே 13ம் தேதி என்றாலே இலங்கைக்கு குலை நடுங்கும், அதுவும் ஹிட்மேன் ஆடுகிறார் என்றால் இலங்கைக்கு எப்போதும் முதுகுத் தண்டு சில்லிடவே செய்யும். ஒவ்வொரு முறை ரோகித் இறங்கும் போதும் 264 கண் முன்னால வந்து போகுமா இல்லையா?

    ரோகித் சர்மா


    மொஹாலியில் டிசம்பர் 13ம் தேதி, 2017-ம் ஆண்டு நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் திசர பெரேரா டாஸ் வென்று வம்படியாக இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். ரோஹித் சர்மா அப்போது ஒரு பார்முலா வைத்திருந்தார், அதாவது முதல் 10 ஒவர்களில் சாதுவாக ஆடுவது, அடுத்த 30 ஓவர்களில் கொஞ்சம் வேகம் கூட்டி ரன்களை அள்ளுவது, கடைசி 10 ஓவர் நின்றால் அவ்வளவுதான் எதிரணி பவுலிங்கை சாவடி அடித்து விடுவார்.

    மொஹாலியில் லாங் பவுண்டரி என்று இலங்கை அணி ஷார்ட் பிட்ச் ஆக வீசியது ரோகித் சர்மாவுக்கு அது எவ்வளவு பெரிய தவறு!! சிக்சர்கள் பறந்தன. இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் சுரங்க லக்மல், நுவான் பிரதீப் வைடு யார்க்கர்களை கடைசியில் வீசினர் பயனில்லை, பவுண்டரி பறந்தது. தாழ்வான புல்டாஸ்களை ஹிட்மேன் மைதானத்துக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். 40வது ஓவரில் 16வது ஒருநாள் சதத்தை எடுத்த ரோகித் சர்மா அடுத்த 100 ரன்களை 36 பந்துகளில் விளாசி 3வது இரட்டைச் சதம் எடுத்தார். 153 பந்துகளில் 208 ரன்களை 13 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் எடுத்தார். 124 ரன்கள் பவுண்டரி, சிக்சர்களிலேயே விளாசினார், அதாவது 25 பந்துகளில் 124 ரன்கள் மறக்க முடியுமா?

    rohit sharma


    இந்திய அணி 392/4 என்று குவிக்க, இலங்கை அணி அஞ்சேலோ மேத்யூசின் 111 ரன்களுடன் 251/8 என்று தோல்வி அடைந்தது. இலங்கையின் நுவான் பிரதீப் 10 ஒவர்கள் 106 ரன்கள் விளாசப்பட்டார். இதில் இவர் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்களை வாரி வழங்கினார். இந்திய அணியில் சிக்கனமாக வீசியவர் ஹர்திக் பாண்டியா 10 ஒவர் 39 ரன் 1 விக்கெட். அந்த ஹர்திக் பாண்டியாவை இனி பார்க்க முடியுமா?

    இந்த ஆட்டத்தின் நாயகன் ரோகித் சர்மா, இன்னொரு விஷயம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானதும் இதே போட்டியில்தான்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Rohit sharma

    அடுத்த செய்தி