நம்ப முடிகிறதா?- வங்கதேசத்திடம் டெஸ்ட் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா- இதே நாளில் அன்று

ஆட்ட நாயகன் ஷாகிப் அல் ஹசன்.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதியன்று வங்கதேச அணியிடம் ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வி கண்டது.

 • Share this:
  2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதியன்று வங்கதேச அணியிடம் ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வி கண்டது.

  ஆம்! இன்று ஆகஸ்ட் 30ம் தேதியன்று ஆஸ்திரேலிய அணி ஸ்மித் தலைமையில் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவியது.

  வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களை எடுக்க, ஆஸ்திரேலியா அணி 217 ரன்களுக்குச் சுருண்டது. ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது இன்னிங்சில் வங்கதேசம் 221 ரன்களுக்குச் சுருண்டது. நேதன் லயான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  265 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலியா வார்னர் 112 ரன்கள் விளாசியும் 158/2 என்ற நிலையிலிருந்து சரிந்து 244 ரன்களுக்குச் சுருண்டு 20 ரன்களில் தோல்வி கண்டது. ஷாகிப் அல் ஹசன் மீண்டும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  Also Read: Stuart Binny: உலக சாதனை படைத்த ஸ்டூவர்ட் பின்னி ஓய்வு

  இந்த டெஸ்ட் போட்டியில் தமிம் இக்பால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 70க்கு மேல் எடுக்க ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்சில் 8 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 37 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார்.

  வங்கதேச அணிக்கு முஷ்பிகுர் ரஹிம் கேப்டன். ஆட்ட நாயகனாக ஷாகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.

  ஸ்டீவ் ஸ்மித் இந்தத் தோல்வி குறித்து கூறும்போது, “2வது இன்னிங்சில் இந்தப் பிட்சில் பேட் செய்வது மிகமிகக் கடினமாக இருந்தது, பந்தின் பவுன்ஸ் மேலும் கீழுமாக இருந்தது. முதல்நாளிலிருந்தே பிட்ச் ஸ்பின் எடுத்து பந்துகள் திரும்பத் தொடங்கியது, ஆனால் சாக்குப் போக்கு சொல்ல விரும்பவில்லை, வங்கதேசம் இந்தப் பிட்சில் எங்களை விட சிறப்பாக ஆடினர்” என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  .
  Published by:Muthukumar
  First published: