Home /News /sports /

2016-ம் ஆண்டு இதே குடியரசு தினம்: கிங் கோலியின் மிகப்பெரிய இன்னிங்ஸ்

2016-ம் ஆண்டு இதே குடியரசு தினம்: கிங் கோலியின் மிகப்பெரிய இன்னிங்ஸ்

விராட் கோலியின் அபார இன்னிங்ஸ்

விராட் கோலியின் அபார இன்னிங்ஸ்

2016 ஆம் ஆண்டு இந்த நாளில், அதாவது குடியரசு தினத்தன்று கிங் விராட் கோலி 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்களை விளாசினார், இதன் மூலம் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 ஐ எளிதாக வெற்றி பெற முடிந்தது.

  2016 ஆம் ஆண்டு இந்த நாளில், அதாவது குடியரசு தினத்தன்று கிங் விராட் கோலி 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்களை விளாசினார், இதன் மூலம் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 ஐ எளிதாக வெற்றி பெற முடிந்தது.

  2016 இல் இந்த நாளில்: இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம். இந்தியாவில் நூறு கோடிக்கணக்கானோர் குடியரசு தினத்தை கொண்டாடிய அதே வேளையில், ஜனவரி 26 ஆம் தேதி ஆஸ்திரேலிய தினமுமாகும். 2016 ஆம் ஆண்டு அடிலெய்டு ஓவலில் நடந்த டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதிய இதே நாளில் மோதியது. ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். ரோஹித் ஷர்மா 5வது ஓவரில் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் முன், இந்திய அணிக்கு உற்சாகமான தொடக்கத்தைத் தந்தார்.

  அப்போதுதான் வெள்ளைப்பந்து கிரேட் பேட்டர் கின் கோலி களம் புகுந்தார். அதே ஓவரில் ஷேன் வாட்சனின் இரண்டாவது பலியாக ஷிகர் தவான் வெளியேறினார், ஆனால் அது கோலியையும் புதிய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவையும் தடுக்கவில்லை. இந்த ஜோடி வெறும் 39 பந்துகளில் ஐம்பது ரன் சேர்த்தது, கோலி 31 ரன்களுடன் ஆக்ரோஷமாக இருந்தார். இந்தியா 13வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. கிங் கோலி தனது அரை சதத்தை 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் எடுத்து முடித்தார்,

  பெரும்பாலும் கோலி ஆதிக்கம் செலுத்த ரெய்னாவுடனான பார்ட்னர்ஷிப் வெறும் 68 பந்துகளில் நூறு ரன்களை எட்டியது. கோலி 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. கிங் கோலி தனது கம்பீரமான இன்னிங்ஸின் போது சில நேர்த்தியான ஷாட்களை ஆடினார் - ஒரு அழகான பேக்-ஃபுட் டிரைவ், அதைத் தொடர்ந்து கேன் ரிச்சர்ட்சனின் பந்தில் ஆக்ரோஷமான கட் ஷாட் பவுண்டரி, , வாட்சனின் பந்தில் ஒரு அற்புதமான எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் மற்றும் ஷான் டெய்ட் பந்தை பிளிக்கில் ஸ்டாண்ட்ஸுக்கு அனுப்பியது என்று மறக்க முடியாத அந்தக் கோலியை நினைத்துப் பார்த்து இப்போது ஆடும் கோலிக்கு பதிலீடு செய்து கொள்ள வேண்டிய நிலைமையாகி விட்டது.

  டெய்ட், ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோர் பவுலிங்கை கோலி பின்னி எடுத்தார், இதனால் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர்.

  ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் மற்றும் ஃபின்ச் சிறந்த தொடக்கத்தை வழங்கினர், அதன் பிறகு டி20-யில் அறிமுகமான ஜஸ்பிரித் பும்ரா, வார்னரை வீழ்த்தினார்.

  ஃபின்ச் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அணியை பாதையை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் ஆஸ்திரேலியா 3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது - ஸ்மித், பின்ச் மற்றும் ஹெட் ஆகியோர் ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சுழல் இரட்டையரிடம் வீழ்ந்தனர். இதன் பிறகு எழுந்திருக்க முடியாமல் ஆஸ்திரேலியா 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

  இந்தியா தரப்பில் ஜடேஜா 2/21, பும்ரா 3 விக்கெட்டுகள். ஆனால் அன்றைய ஹீரோ கிங் கோலிதான் ஆஸ்திரேலியாவின் வெற்றியை தன் பேட்டிங்கினால் சிங்கிள் ஹேண்டில் பறித்தார் என்றே கூற வேண்டும்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs Australia, Virat Kohli

  அடுத்த செய்தி