• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • முதன் முதலில் 30,000 ரன்கள் மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் எட்டிய நாள்- மறக்க முடியுமா?

முதன் முதலில் 30,000 ரன்கள் மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் எட்டிய நாள்- மறக்க முடியுமா?

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

  • Share this:
    நவம்பர் 16-20-ல் 2009-ம் ஆண்டு இதே தேதியில் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தன் 35வடு டெஸ்ட் சதத்தை எடுத்ததோடு சர்வதேச அரங்கில் 30,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். அதோடு கடினமான அந்த டெஸ்ட்டையும் ட்ரா செய்தார்.

    இந்திய அணிக்கு தோனி கேப்டன், இலங்கை அணிக்கு குமார் சங்கக்காரா கேப்டன். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 426 ரன்கள் எடுத்தது. இதில் ராகுல் திராவிட் 177, யுவராஜ் சிங் 68, தோனி 110 ரன்கள் எடுத்தனர். ஆனால் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், மைதானம் நெடுக இந்திய அணியினர் சுமார் 202 ஓவர்கள் ஓடினர், இலங்கை அணி தன் முதல் இன்னிங்சில் 760 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து டிக்ளேர் செய்தது. மகேலா ஜெயவர்தனே 27 பவுண்டரி 1 சிக்சருடன் 275 ரன்கள் என்ற மாரத்தான் இன்னிங்ஸை ஆடினார்.

    லிட்டில் மாஸ்டர் சச்சின் 200 நாட் அவுட் சாதனை ஜெர்சி இதுதான்.


    இது போதாதென்று 7ம் நிலையில் இறங்கிய பிரசன்ன ஜெயவர்தனே 154 ரன்களை புரட்டி எடுத்தார். இந்திய அணி களைப்படைந்து விட்டது, ஜாகீர் கான், இஷாந்த்சர்மா, ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்திய அணி 344 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்ட முடிவில் 2வது இன்னிங்சில் இந்தியா வலுவாக 190/2 என்றி முடித்தது. சேவாக் 51 விளாச கம்பீரும் இவரும் சேர்ந்து 81 ரன்கள் சேர்க்க ராகுல் திராவிட் 38 ரன்களில் வெளியேறினார். அமித் மிஸ்ரா 12 ரன்கள், கம்பீர் 74 ரன்கள் 4ம் நாள் முடிவில் களத்தில் இருந்தனர்.

    இன்னொரு 154 ரன்களை இந்தியா எடுக்க வேண்டும். எடுத்தால்தான் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியும், பிட்சில் ஒன்றுமில்லை, இருந்தாலும் முரளிதரன், ஹெராத் இருக்கின்றனரே. 5ம் நாள் நைட் வாட்ச்மேன் அமித் மிஸ்ரா வெளியேற சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார், இவரும் கம்பீரும் சேர்ந்து 66 ரன்கள் சேர்த்தனர், கவுதம் கம்பீர் மிக முக்கியமான சதம் எடுத்து 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    சச்சின் டெண்டுல்கர்


    அதன் பிறகு லஷ்மண் (51), சச்சின் டெண்டுல்கர் (100) இருவரும் நாட் அவுட்டாக இருந்து 412/4 என்று ட்ரா செய்தனர். சச்சின் டெண்டுல்கர் இதில் 30,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். அதே போல் 35வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதன் முதலாக 30,000 ரன்கள் மைல்கல்லை எட்டும் முதல் வீரர் ஆனார் சச்சின் டெண்டுல்கர். ஆட்டம் ட்ரா ஆனது, முத்தையா முரளிதரன் 38 ஓவர்கள் வீசி 124 ரன்களுக்கு விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஏனெனில் கம்பீர், டெண்டுல்கர், லஷ்மண் அனைவருமே ஸ்பின் மாஸ்டர்கள் என்பதுதான்.

    ஆனால் ஆட்ட நாயகனாக 275 ரன்கள் மாராத்தான் இன்னிங்ஸ் ஆடிய மகேலா ஜெயவர்தனே தேர்வு செய்யப்பட்டார். இதே தொடரில் அடுத்த 2 போட்டிகளிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது, இதில்தான் 3வது டெஸ்ட் போட்டியில் மும்பையில் விரேந்திர சேவாக் 40 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 254 பந்துகளில் 293 ரன்கள் விளாசி 3வது முச்சதம் என்ற அரிய உலக சாதனையை 7 ரன்களில் கோட்டை விட்டார். தோனி யும் ஒரு சதம் விளாசினார். தோனி 154 பந்துகளில் 100 ரன்களை 3 பவுண்டரி 6 சிக்சர்களுடன் விளாசினார். இந்தியா பழிக்குப் பழியாக 726 ரன்கள் விளாசி இலங்கையை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: