உலகின் மிகப்பெரிய லெக் ஸ்பின்னரான ஆஸ்திரேலிய லெஜண்ட் ஷேன் வார்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற நாள் இன்றைய தினமான ஆகஸ்ட் 11ம் தேதியாகும்.
2005 ஆம் ஆண்டு ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது வார்ன் இந்த சாதனையை நிகழ்த்தினார். தொடருக்கு முன்னதாக, வார்ன் 583 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். லண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வார்ன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பர்மிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், அடுத்த இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ஷேன் வார்ன்.
இந்நிலையில் ஓல்ட் ட்ராபர்ட் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி, ஷேன் வார்னின் இந்தச் சாதனையை எதிர்நோக்கி இந்த நாள் ஆட்டம் தொடங்கியது. 600 என்ற மேஜிக் நம்பரை எட்ட ஷேன் வார்னுக்குத் தேவை ஒரேயொரு விக்கெட்டே. பிரட் லீ, வந்து வீசி ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆனால் அதன் பிறகு மார்கஸ் ட்ரெஸ்கோதிக் (63), மைக்கேல் வான் (166) சேர்ந்து 137 ரன்களைச் சேர்த்தனர். அப்போது ஷேன் வார்ன் வீசிய பந்து ஒன்று இடது கை வீரரான் டிரெஸ்கோத்திக்கின் பல இடங்களிலும் பட்டு விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தொடையில் பட்டு அவரிடமே கேட்ச் ஆனது.
இந்த விக்கெட்டுதான் ஷேன் வார்னின் மேஜிக் 600. ஷேன் வார்ன் இந்த இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 444 ரன்களைக் குவித்தது. பேட்டிங்கிலும் ஜாம்பவனான ஷேன் வார்ன் இதே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 133/5 என்று தவித்த போது ஷேன் வார்ன் பேட்டிங்கிலும் இறங்கி 122 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 90 ரன்களையும் எடுக்க ஆஸ்திரேலியா சுமாரான 302 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ரிவர்ஸ் ஸ்விங் டைகர் என்று அழைக்கப்பட்ட சைமன் ஜோன்ஸ் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
2வது இன்னிங்சில் ஸ்ட்ராஸ் சதமெடுக்க இங்கிலாந்து 280/6 என்று டிக்ளேர் செய்தது. 423 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலியா ரிக்கி பாண்டிங் 156 ரன்களை விளாச ஆஸ்திரேலியா 371/9 என்று டெஸ்ட்டை பிரபலமான ட்ரா செய்தது. ஷேன் வார்ன் 2வது இன்னிங்சில் 34 ரன்களை எடுத்ததும் ட்ராவுக்கு வழிவகை செய்தது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என்று ட்ரா ஆனது. ஆனால் தொடரை 2-1 என்று இங்கிலாந்து வென்றது. மிகவும் நெருக்கமான தொடர் இது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashes, Shane Warne