Home /News /sports /

இந்த நாளை மறக்க முடியுமா! இங்கிலாந்து பவுலிங்கை நெட்-பவுலிங் போல் விளாசித் தள்ளிய சச்சின் - சேவாக்

இந்த நாளை மறக்க முடியுமா! இங்கிலாந்து பவுலிங்கை நெட்-பவுலிங் போல் விளாசித் தள்ளிய சச்சின் - சேவாக்

சச்சின் - சேவாக் விளாசல்

சச்சின் - சேவாக் விளாசல்

இதே ஜனவரி 28ம் தேதி 2002ம் ஆண்டு கான்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், வீரேந்திர சேவாக்கும் இணைந்து சதக்கூட்டணி அமைத்தனர்.  இங்கிலாந்து பந்து வீச்சை நெட் பவுலிங் போல் விளாசித்தள்ளி நிர்ணையித்த இலக்கையும் கேலி செய்யுமாறு அடித்து நொறுக்கி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
    இதே ஜனவரி 28ம் தேதி 2002ம் ஆண்டு கான்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், வீரேந்திர சேவாக்கும் இணைந்து சதக்கூட்டணி அமைத்தனர்.  இங்கிலாந்து பந்து வீச்சை நெட் பவுலிங் போல் விளாசித்தள்ளி நிர்ணையித்த இலக்கையும் கேலி செய்யுமாறு அடித்து நொறுக்கி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர்.

    2002ல் நாசர் உசேன் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கான்பூரில் உள்ள புகழ்பெற்ற கிரீன் பார்க் மைதானத்தில் நடந்த ஆறு போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது ஒருநாள் போட்டி இதுவாகும். இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    கங்குலி தலைமையிலான இந்த இந்திய அணி டெண்டுல்கர், சேவாக், கங்குலி, தினேஷ் மோங்கியா, பதானி, மொகமட் கயிஃப், அஜய் ராத்ரா (வி.கீ), அகார்கர், கும்ப்ளே, ஹர்பஜன் ஜவகல் ஸ்ரீநாத் என்று இருந்தது.



     

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் நிக் நைட் (72), மார்கஸ் ட்ரெஸ்கோதிக் இணைந்து 10 ஓவர்களில் 73 ரன்கள் என்று அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஆனால் கும்ப்ளே, ட்ரெஸ்கோத்திக்கை வீழ்த்தவும், ஆண்ட்ரூ பிளிண்டாஃப் இறங்கி அபாயகரமாக ஆடினார். 1 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் அவர் 19 பந்தில் 18 ரன்கள் எடுத்த போது கும்ப்ளேயிடம் வீழ்ந்தார். 111/1 என்று இருந்த இங்கிலாந்து அங்கீருந்து அடுத்த 107 ரன்களுக்கு மீதமுள்ள அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓவர்களில் 218 ரன்களுக்கு சுருண்டது.

    இந்திய அணியில் கும்ப்ளே, ஹர்பஜன், கங்குலி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிறகு இந்தியா இலக்கைத் துரத்திய போது அன்று என்ன ஆச்சு என்று தெரியவில்லை. குருவும் சிஷ்யனுமான சச்சின், சேவாக் வெளுத்து வாங்கினர். இத்தனைக்கும் இங்கிலாந்து அணியில் டேரன் காஃப், மேத்யூ ஹோகார்ட், பிளிண்டாஃப் ஆகியோர் இருந்தனர்.

    ஆனால் சச்சினும் சேவாகும் அன்று என்ன மூடில் இருந்தனர் என்று தெரியவில்லை. வெளுத்து கட்டிவிட்டார்கள் இருவரும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் இங்கிலாந்தின் ஸ்கோரை கேலியாக மாற்றினர். . இருவருமே தங்கள் வலிமையின் உச்சத்தில் இருந்தவர்கள் மற்றும் உச்சகட்ட அட்டாக்கிங் மூடில் இருந்தனர். அவர்கள் தாக்குதலை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களிடம் கொண்டு சென்று டேரன் கோஃப், மேத்யூ ஹோகார்ட் மற்றும் பிளின்டாஃப் போன்ற தரமான பவுலர்களையும் நெட் பவுலர்கள் போல் புரட்டி எடுத்தனர். அவர்கள் 17 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்கு 134 ரன்களை சேர்த்து துரத்தலை வெறும் சம்பிரதாயமாக விட்டுச் சென்றனர்.

    இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் ரியாக்‌ஷன்


    இந்த கூட்டணியை பால் காலிங்வுட் முறியடித்தார், அவர் நஜாப்கரின் நவாப் என்று அழைக்கப்படும் சேவாகை 62 பந்துகளில் 82 ரன்கள் விளாசியப் பிறகு ஆட்டமிழக்கச் செய்தார் - இதில் 14 அற்புதமான பவுண்டரிகள் அடங்கும். பிறகு சச்சின், கங்குலி இருவரும் உத்வேகத்தைத் தொடர்ந்தனர்.

    லிட்டில் மாஸ்டர் 67 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் - அவரது ஆட்டத்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தினேஷ் மோங்கியா ஒரு பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், இந்தியா 30 ஓவர்களுக்குள் 7.38 ரன் விகிதத்தில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. சச்சின் டெண்டுல்கர் ஜெர்மி ஸ்னேப் பந்தை சிக்சருக்கு அடித்த போது இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.

    பிளின்டாஃப் மற்றும் பென் ஹோலியோக் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியிருந்தனர். டேரன் காஃப் ஹோகார்ட் மற்றும் ஜெர்மி ஸ்னேப் ஆகியோர் ஓவருக்கு 7க்கு மேல் கொடுத்தனர்.. இந்தியா தொடரில் 3-1 என முன்னிலை பெற்றது. இந்தியாவுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சேவாக் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உண்மையில் இங்கிலாந்து பவுலிங் அன்று நெட் பவுலிங்தான். சச்சின் - சேவாக் உலகின் ஒரு அபாயகரமான தொடக்க வீரர்களாக கருதப்படத்ட் தொடங்கினர், எதிரணிகளுக்கு அந்தக் காலக்கட்டத்தில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Sachin tendulkar, Virender sehwag

    அடுத்த செய்தி