• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒருநாள் போட்டிகளில் முதல் ஹாட்ரிக் எடுத்த வீரர் யார் தெரியுமா?- தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

ஒருநாள் போட்டிகளில் முதல் ஹாட்ரிக் எடுத்த வீரர் யார் தெரியுமா?- தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

ஒருநாள் கிரிக்கெட் முதல் ஹாட்ரிக் வரலாற்று வீரர் பாகிஸ்தானின் ஜலாலுதீன்.

ஒருநாள் கிரிக்கெட் முதல் ஹாட்ரிக் வரலாற்று வீரர் பாகிஸ்தானின் ஜலாலுதீன்.

செப்டம்பர் 20ம் தேதியான இன்று 1982ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் ஜலாலுதீன் முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை புரிந்து வரலாறு படைத்தார்.

  • Share this:
    ஜலாலுதீன் முதல் ஹாட்ரிக் எடுத்து வரலாறு படைத்த பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 44 ஹாட்ரிக்குகள் பதிவாகியுள்ளன. கபில்தேவின் சிஷ்யன் இந்தியாவின் சேத்தன் சர்மா உலகக்கோப்பையில் முதன் முதலாக ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஆனால் முதன் முதலில் ஹாட்ரிக் எடுத்தது இதைவிடவும் நினைவுகூரத்தக்கதல்லவா! ஏனெனில் இன்று கிரிக்கெட் உலகில் புறக்கணிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டு வரும் பாகிஸ்தான் அணியிலிருந்துதான் உலகின் முதல் ஒருநாள் ஹாட்ரிக் வந்திருக்கிறது என்றால் அது அந்த அணிக்கு பெரிய விஷயமாகும்.

    1982-ல் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்காக வந்திருந்தது. அந்தப் போட்டியில் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது. டாஸை தோற்றது மறைமுக ஆசீர்வாதமாக, பாகிஸ்தான் தொடக்க வீரர் ஸ்டைலிஷ் மோசின் கான் 101 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரிகள் அடித்தார் மோசின் கான். பிறகு ஜெஃப் லாசனிடம் அவுட் ஆனார்.

    ஆனால் மோசின் கானை விட்டால் யாருமே 31 ரன்களைத் தாண்டவில்லை. பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. பீல்டிங் கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் 229 ரன்களை 40 ஓவர்களில் எடுப்பதெல்லாம் சாதாரணமானதல்ல. ஆஸ்திரேலியா பிரமாதமாக தொடங்கினர், புரூஸ் லெய்ர்ட் என்ற வீரரும் கிரேம் உட் என்ற வீரரும் சேர்ந்து 104 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்தனர்.

    அப்போது கிரேம் உட் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பந்தை கடுமையாகத் திருப்பும் தவ்சீப் அகமது இவரை வீழ்த்தியிருந்தார். இந்த விக்கெட் விழுந்தவுடன் சீரான முறையில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழந்தது. ஜலாலுதீன் என்ற வேகப்பந்து வீச்சாளருக்கு அப்போது வயது 23 தான். இவர் ஆஸ்திரேலியாவின் பெரிய விக்கெட் கீப்பர் ராட்னி மார்ஷ் (1), புரூஸ் யார்ட்லி (0), ஜெஃப் லாசன் (0) ஆகியோர் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்த ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற வரலாற்றை நிகழ்த்தினார் ஜலாலுதீன்.

    ஜலாலுதீன் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, 59 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. ஹாட்ரிக் சாதனை தவிர அப்போது ஆஸ்திரேலியாவின் அசகாய சூரர் ஆலன் பார்டர் விக்கெட்டையும் ஜலால் உதீன் கைப்பற்றினார். முதல் ஹாட்ரிக் சாதனை புரிந்தும் இவரது கிரிக்கெட் வாழ்க்கை 6 டெஸ்ட் 8 ஒருநாள் போட்டிகளுடன் முடிந்ததுதான் வேதனை. இந்த நாள் ஜலாலுதீனுடையது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: