• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Historical Chennai Test: செப்.22, 1986: சென்னை டெஸ்ட்டில் வரலாற்றில் இடம்பிடித்த இந்திய அணி

Historical Chennai Test: செப்.22, 1986: சென்னை டெஸ்ட்டில் வரலாற்றில் இடம்பிடித்த இந்திய அணி

டை டெஸ்ட் போட்டியில் 119 ரன்கள் எடுத்து வரலாற்றில் இடம்பெற்ற கேப்டன் கபில்தேவ்

டை டெஸ்ட் போட்டியில் 119 ரன்கள் எடுத்து வரலாற்றில் இடம்பெற்ற கேப்டன் கபில்தேவ்

செப்டம்பர் 22, 1986-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாறுக்குள் நுழைந்தது. உலக டெஸ்ட் வரலாற்றில் டை ஆன 2வது டெஸ்ட்டில் இந்தியாவின் பெயர் இடம்பெற்றது.

  • Share this:
இதே நாளில்தான் டெஸ்ட் போட்டியும் தோன்றியது, முதன் முதலில் இரு நாட்டு அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடின. அதன் பிறகு இன்று வரை 2433 டெஸ்ட் போட்டிகள் ஆடப்பட்டுள்ளன. இதில் இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் டை ஆகியுள்ளது. அதில் ஒன்றுதான் இதே நாளில் 1987-ல் சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியாகும். கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி ஆனால் மணீந்தர் சிங் அவுட் ஆனார். அது அவுட் இல்லை, எல்.பி இல்லை என்று ரவிசாஸ்திரி எதிர்முனையில் நடுவரிடம் வாக்குவாதம் புரிந்தார். டெஸ்ட் டை ஆனது.

செப்டம்பர் 18ம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் ஆலன் பார்டர் தலைமை ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது, இந்திய பந்து வீச்சை வறுத்தெடுத்த ஆஸ்திரேலியாவில் டேவிட் பூன் 122, டீன் ஜோன்ஸ் 210, ஆலன் பார்டர் 106 என்று ஸ்கோர் எகிற 574/7 என்று டிக்ளேர் செய்யப்பட்டது. டீன் ஜோன்ஸ் மெட்ராஸ் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார், பெரிய இன்னிங்ஸ் ஆக அது கருதப்படுகிறது. இந்திய அணியில் ஷிவ்லால் யாதவ் ஆஃப் ஸ்பின்னர் 4 விக்கெடுகளைக் கைப்பற்றினார்.

இந்த பெரிய ரன் எண்ணிக்கை மூலம் இந்தியா வெற்றி பெற முடியாத நிலைக்கு ஆஸ்திரேலியா கொண்டு சென்று விட்டது. இந்தியா இன்னிங்ஸை தொடங்கிய போது சென்னை மண்ணின் மைந்தன் கிருஷ் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் 8 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு அதிரடி காட்டினார். 62 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சர் உடன் 53 ரன்கள் விளாசினார். முகமட் அசாருதீன் 50, ரவிசாஸ்திரி 62, சந்திரகாந்த் பண்டிட் 35, என்று ஆட்டமிழக்க கேப்டன் சாம்பியன் கபில்தேவ் தன் வாழ்நாளின் இரண்டாவது மிகப்பெரிய சதத்தை எடுத்தார். முதலில் 1983 உ.கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுத்த 175 நாட் அவுட், இப்போது 119 ரன்கள். 138 பந்துகளில் அவர் 119 ரன்களை எடுத்தார். சேத்தன் சர்மா 30 ரன்கள் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் எடுத்தது.

மணீந்தர் சிங் எல்.பி. ஆகும் காட்சி, ரவிசாஸ்திரி ஏமாற்றம் ரன்னர் முனையில் இருக்கிறார் ஆஸ்திரேலியா கொண்டாட்டம், டை டெஸ்ட் சென்னை 1986


ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் கிரெக் மேத்யூஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிரெக் மேத்யூஸ் அப்போதெல்லாம் இந்தியாவில் பேமஸ். ஆஸ்திரேலியா 177 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் இறங்கி 170/5 என்று டிக்ளேர் செய்தது. மிக அருமையான ஒரு டிக்ளேர், இதன் மூலம் இந்தியாவை வெல்ல முடியுமா என்று சவால் விடுத்தது. 347 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டுவது அப்போது பெரிய காரியமாகும்.

ஆனால் சவாலை ஏற்றது இந்திய அணி, சுனில் கவாஸ்கர் வெளுத்துக் கட்டினார். 168 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 90 எடுத்தார். ஸ்ரீகாந்த் தன் அனாயாச மட்டைச் சுழற்றலில் மீண்டும் வேகமாக 39 ரன்களை எடுத்தார். மொகீந்தர் அமர்நாத் 51 ரன்கள். சந்திரகாந்த் பண்டிட் 39 ரன்கள். அசாருதீன் தன்பங்குக்கு 42 ரன்க்ளை வேகமாக எடுத்தார். கபில்தேவ் சோபிக்கவில்லை 1 ரன்னில் ஆட்டமிழக்க, ரவிசாஸ்திரி 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். சேத்தன் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்தியா 204/2 என்று வெற்றியை நோக்கி பிரயாணித்தது.

கடைசி 30 பந்துகளில் இந்திய அணி 18 ரன்களை அடிக்க வேண்டும். 4 விக்கெட்டுகள் மீதமுள்ளன. கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி. ஒரு விக்கெட் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி, ரவிசாஸ்திரி 2 ரன்கள் பிறகு ஒரு ரன்னை எடுக்க மணீந்தர் சிங் கடைசி பந்தில் 1 ரன் எடுக்க வேண்டும் ஆனால் மேத்யூஸ் பந்தில் எல்.பி.ஆவார். அது எல்.பி. இல்லை என்று ரவிசாஸ்திரி வாதம் புரிந்தார். இன்னும் ஒரு பந்து மீதமிருக்கையில் ஆட்டம் டை ஆனது இந்தியா வரலாற்றில் இடம்பிடித்தது. ஆட்ட நாயகனாக எவர் கிரீன் கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டார், மறக்க முடியாத ஒரு டெஸ்ட் போட்டியாகும் இது.

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: