இந்த நாளை மறக்க முடியுமா... ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

இந்த நாளை மறக்க முடியுமா... ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது
2003 உலக்கோப்பை இறுதி போட்டி
  • Share this:
கிரிக்கெட் போட்டிகளில் சில போட்டிகள் மட்டும் என்றும் நம் நினைவை விட்டாது நீங்காது. 100 வெற்றி தரும் உற்சாகத்தை 1 தோல்வி மறைத்துவிடும் என்பதற்கு உதாரணமே 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.

2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது மார்ச் 23. 2003. உலகக் கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோல்வியடைந்தது.

அதன்பின் சூப்பர் சிக்ஸ், அரையிறுதி போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. 1983-ம் ஆண்டு உலக்கோப்பையை வென்ற பின், 20 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.


இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் சவுரவ் கங்குலி பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்கும் காரணத்தால் அவர் இந்த முடிவை எடுத்தார். ஆனால் அந்த முடிவு போட்டியில் தலைகீழாக மாறியது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கோரதாண்டவம் விளையாடி 121 பந்துகளில் 140 ரன்கள் சேர்பார். அவருக்கு துணையாக டேமியன் மார்டினும் போட்டியில் அதிரடி காட்டியதால் 50 ஒவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்களை மட்டும் இழந்து 359 ரன்கள் எடுத்தது.இமாலய இலக்காக இருந்தாலும் இந்திய ரசிகர்கள் கோப்பை நமக்கு தான் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். அதற்கு காரணம் சச்சின் டெண்டுல்கரை மலை போல் நம்பி இருந்தனர். அந்த தொடர் முழுவதும் சச்சின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 6 அரைசதம், 1 சதம் விளாசி 669 ரன்கள் எடுத்திருந்தார்.சச்சின், சேவாக் தொடக்க வீரர்களாக களமிறங்க ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே இந்திய ரசிகர்களின் இதயத்தை சுக்குநூறாக உடைத்தார் சச்சின். 4 ரன்னில்  ஆட்டமிழந்து வெளியேறி அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார். சச்சின் அவுட்டான உடன் மைதானத்தை விட்டு பல ரசிகர்கள் வெளியேற ஆரம்பித்தனர். இந்த தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடிய சச்சின் 673 ரன்கள் எடுத்தார். இதுவே உலகக்கோப்பையில் தனி ஒரு வீரர் எடுத்த அதிகப்பட்ச ரன்கள் என்ற சாதனையாக இன்றும் தொடர்கிறது.இந்திய அணியின் அடுத்த வந்த வீரர்கள் யாரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறினார்கள். இதனால் இந்திய அணி 39.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சேவாக் மட்டும் சற்று அதிரடியாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரந்து 2வது முறையாக கோப்பை வென்று சாதித்தது. இந்திய அணி கோப்பையை வெல்லும் அந்த உற்சாகத்தை பட்டாசு வெடித்து கொண்டாலாம் என்று ஆவலுடன் இருந்த ரசிகர்கள், சச்சின் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டதற்கு அந்த பட்டாசுகளை வெடித்து ஆறுதல் அடைந்து கொண்டனர்.

 
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading