இந்திய அணியில் தோனியின் எதிர்காலம்? முடிவெடுத்த கங்குலி

நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற உள்ள தொடரிலும் தோனி இடம்பெறமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அணியில் தோனியின் எதிர்காலம்? முடிவெடுத்த கங்குலி
சவுரவ் கங்குலி
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மீண்டும் அணியில் இடம்பிடிப்பாரா என்ற கேள்விக்கு சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின் அணியில் இடம்பெறவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது இந்திய ராணுவத்தில் பயிற்சி எடுக்க உள்ளதாக கூறி விலகினார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரிலும் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை. நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற உள்ள தொடரிலும் தோனி இடம்பெறமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே தோனி ஓய்வு குறித்து பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி வந்த போதும் இதுவரை தோனி எந்தவித முடிவும் அறிவிக்கவில்லை.


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில், “வரும் 24ம் தேதி இந்திய அணியின் தேர்வுக்குழுவினரை சந்தித்து பேச உள்ளேன். அப்போது தோனியின் நிலை குறித்து அவர்களிடம் கலந்து ஆலோசிக்கப்படும். மேலும் தோனியின் விருப்பத்தை அவரிடம் பேச உள்ளேன். அதன்பின் தான் தோனியின் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன்“ என்று கூறியுள்ளார்.

Also Watch

First published: October 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...