Ollie Robinson: 8 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறு- அறிமுக இங்கிலாந்து பவுலர் ஆலி ராபின்சன் விளையாடத் தடை: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆலி ராபின்சன் தடை.

லார்ட்ஸ் டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி அசத்தலாகப் பந்து வீசியும் நன்றாக பேட்டிங் செய்தும் திறமையை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ஆலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்.

  • Share this:
    2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஆலி ராபின்சன் மேற்கொண்ட சில சமூக ஊடகப்பதிவுகள் வெள்ளை நிறவெறி மேட்டிமைத் தன்மையுடனும் பெண்களுக்கு எதிராகவும் இருந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் இவர் அறிமுகமான அன்றே இவரது ட்வீட்கள் மீண்டும் வலம் வர சர்ச்சை கிளம்பியது.

    இதனையடுத்து வரும் வியாழனன்று தொடங்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் அணித்தேர்வுக்கு இவர் பெயர் பரிசீலிக்கப்படமாட்டாது.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிறகு அவரை சசெக்ஸ் கவுண்டி அணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

    பதின்ம வயது குறும்பு அல்லது திமிரில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நிறவெறியைக் காட்டியும் பெண்களுக்கு எதிராகவும் அவர் ட்வீட்களைப் பதிவு செய்தது அம்பலமாக அவருக்கு உள்ளிருந்தே கடும் விமர்சனங்கள் எழுந்தன.

    டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவுடனேயே ராபின்சன் ட்வீட்கள் மீது சர்ச்சைகள் எழுந்தன, ராபின்சனும் அறியா வயதில் தெரியாமல் செய்த தவறு மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பும் கோரினார்.

    லார்ட்ஸ் டெஸ்ட் நேற்று ட்ராவில் முடிவடைந்தது, இந்த டெஸ்ட்டில் அறிமுகமான வலது கை வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட்டிங்கில் முக்கிய கட்டத்தில் 42 ரன்கள் சேர்த்து ரோரி பர்ன்சுடன் முக்கியக் கூட்டணி அமைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த லார்ட்ஸ் டெஸ்ட் தொடங்கும் முன் தான் இங்கிலாந்து, நியூஸிலாந்து வீரர்கள் ’ஒற்றுமைக் கணம்’ என்பதைப் பகிர்ந்து கொண்டு அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிராக நிற்க கைகொடுத்தனர்.

    ராபின்சனின் நிறவெறி ட்வீட்கள் அங்கு பெரும் சர்ச்சைகளைக் கிளப்ப இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வேறு வழியின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதாயிற்று, அவரை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகத் தடை செய்திருக்கிறது, அவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு விசாரணை நடத்தவிருக்கிறது.

    Also Read: பிரெஞ்ச் ஓபனில் இருந்து பெடரர் விலகல்: முந்தைய ஆட்டம் காரணமா?

    கேப்டன் ஜோ ரூட் கூறும்போது, “அறிமுக டெஸ்ட்டில் பிரமாதமாக ஆடினார். ஆனால் களத்துக்கு வெளியே அவரது செய்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல, அவர் கடினமான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கிரிக்கெட் ஆட்டம் என்பது கற்றுக் கொள்ள வேண்டிய இடம், கிரிக்கெட் அனவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது. இதற்காகத்தான் அணி கடமையுடன் செயலாற்றுகிறது. காலம் போகப்போக உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்துவோம்” என்றார்.
    Published by:Muthukumar
    First published: