India vs England | அந்து நொந்து போன இந்திய பேட்டிங்கை மேலும் ஆட்டிப் படைக்க வருகிறார் ராபின்சன்

ஆலி ராபின்சன்

நிறவெறி, பெண் விரோத ட்வீட் பதிவுகளினால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இங்கிலாந்தின் புது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆலி ராபின்சன் தடை செய்யப்பட்டார், இப்போது அவர் தடை நீக்கப்பட்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து அணிக்குத் திரும்புகிறார்.

  • Share this:
    ஆலி ராபின்சனுக்கு 3200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த சர்ச்சைக்குரிய ட்வீட்களை அவர் தன் 18-20 வயதுகளில் பதிவிட்டார். 2012-14 ஆம் ஆண்டுகளில் பதிவிடப்பட்ட கருத்துகளாகும். இந்த சர்ச்சை நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது பூதாகாரமாகக் கிளம்பியது.

    தன் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளையும் 42 ரன்களையும் எடுத்தார் ஆலி ராபின்சன். இதன் பிறகு 8 போட்டிகளுக்கு அவர் விளையாட தடை விதிக்கப்பட்டது, இதில் 5 போட்டிகள் தடை 2 ஆண்டுகளில் செய்யப்பட்டால் போதுமானது.

    நியூசிலாந்துக்கு எதிரான 1 டெஸ்ட், 2 வைட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 போட்டிகளை இவர் ஆடாததால் 3 போட்டிகளுக்கான சஸ்பெண்டு முடிவுக்கு வருகிறது, இதனையடுத்து அவர் உடனடியாக கிரிக்கெட் ஆட தகுதி பெற்றுவிட்டார் ஆலி ராபின்சன்.

    Also Read: Rahul Dravid | ‘வாங்க ஏதாவது படத்துக்குப் போவோம்’- 2007 உ.கோப்பை தோல்விக்குப் பிறகு தோனி, பதானை அழைத்த கேப்டன் திராவிட்

    இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக ஆகஸ்ட் 4ம் தேதி ட்ரெண்ட் பிரிட்ஜில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ராபின்சன் விளையாடுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆலி ராபின்சனும் தன் செயல்களுக்கு வெட்கப்படுவதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

    இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட், நீல் வாக்னர் பந்து வீச்சுக்கு எதிராக திக்கித் திணறி இறுதி போட்டியில் தோற்றது.

    இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஏற்கெனவே ஆண்டர்சன், பிராட், மார்க் உட் இருக்கிறார்கள் பென் ஸ்டோக்ஸ் வந்து விடுவார், இவர்களுடன் ஆலி ராபின்சனும் சேர்ந்து விட்டால் ஏற்கெனவே அந்து நொந்துபோன இந்திய பேட்டிங்குக்கு இன்னும் கடினம்தான், இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.
    Published by:Muthukumar
    First published: