ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தான் களைப்படையவில்லை என்று கோலி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்: ரிக்கி பாண்டிங்

தான் களைப்படையவில்லை என்று கோலி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்: ரிக்கி பாண்டிங்

பாண்டிங், கோலி

பாண்டிங், கோலி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பேட்டிங்கில் போறாத காலம் நடந்து வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 தொடரில், கோலி 16 போட்டிகளில் 22.73 என்ற சராசரியை மட்டுமே வைத்து, ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச போட்டிகளில் கோலியின் 71வது சதத்திற்கான காத்திருப்பு தொடர்கிறது, கடைசியாக நவம்பர் 2019 இல் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்டின் போது சதம் எடுத்ததோடு சரி.

  முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இந்திய நட்சத்திரத்தைப் பற்றி விரிவாகப் பேசினார், அவரது கருத்தை விளக்க ஒரு கிரிக்கெட் வீரராக தனது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துரைத்தார்.

  இது போன்ற மோசமான பார்ம் ஒரு கட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும். விராட் ஒருவேளை 10 அல்லது 12 ஆண்டுகால கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இருந்திருக்கலாம், அதில் அவருக்கு இறக்கங்கள் அதிகம் ஏற்பட்டதில்லை.

  ஆனால் ஐபிஎல் சுற்றில் விராட் கோலி எவ்வளவு சோர்வடைந்துள்ளார் எவ்வளவு வலுவிழந்துள்ளவராகவும் இருப்பார் என்பது பற்றி நிறைய பேச்சுகளும் யூகங்களும் இருந்தன. அது ஒரு தொழில்முறை விஷயமாக இருந்தாலும் சரி, மன விஷயமாக இருந்தாலும் சரி, அவர் வேலை செய்து மதிப்பீடு செய்து மேம்படுத்துவதற்கான வழிகளை அவர் கண்டறிய வேண்டும்.

  நான் உறுதியாக நம்புகிறேன், அவர் ஒரு முழுமையான தொழில்முறை வீரர், அவர் மீண்டும் பார்முக்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை விரைவாகச் செய்வார்.

  அனுபவத்தில் எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைக் கூறுகிறேன், நீங்கள் உண்மையில் சோர்வடையவில்லை, உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ சோர்வடையவில்லை என்று அடிக்கடி நீங்கள் உங்களையே ஒரு வீரராக ஏமாற்றிக் கொள்கிறீர்கள். பயிற்சிக்காக நீங்கள் காலையில் வெகு விரைவில் எழுந்து செல்லும் வழியை எப்பொழுதும் கண்டுபிடிப்பீர்கள், விளையாட்டுக்காக உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்வர்தற்கான வழியைக் காணலாம். ஆனால் இவையெல்லாம் நீங்கள் களைப்படையவில்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் வழிமுறைகள். நீங்கள் உண்மையில் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு யோசித்தால் நீங்கள் எவ்வளவு சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறீர்கள் என்பதை உணரமுடியும்."

  இவ்வாறு கூறுகிறார் ரிக்கி பாண்டிங்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Virat Kohli