விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று இருவரும் வெளியில் கூறிக்கொண்டாலும் அணியில் ரோகித் சர்மா ஆட்கள், விராட் கோலி ஆட்கள் என்று இருபிரிவு இருப்பதாக இங்கிலாந்து வீரர் ஒருவர் கூறியுள்ள நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக இந்திய ஒரு நாள் அணி கேப்டன் விவகாரத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரிடமும் பிசிசிஐ அமர்ந்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டேயில் தொடங்கவிருக்கிறது, இதற்கான அணியைத் தேர்வு செய்வதோடு ஒருநாள் தொடருக்கான அணியையும் தேர்வு செய்து மொத்தமாக 22 வீரர்கள் கொண்ட அணி தென் ஆப்பிரிக்கா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கேப்டனாக ரோகித் சர்மா வெற்றிப்பாதையில் போய்க்கொண்டிருப்பதால் ஒருநாள் போட்டிகளுக்கும் அவரையே கேப்டனாக்கி 2023 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யலாம் என்ற சிந்தனையும் பிசிசிஐயிடம் உள்ளது.
ஆனால் ஒருநாள் கேப்டன்சியைப் பொறுத்தவரை பேட்டிங்கைப் பொறுத்தவரை விராட் கோலியை அசைக்க முடியாதுதான், ஆனால் ஒருவிதமான மும்பை லாபி வலுவாகக் கிளம்பியிருக்கிறது. அதனால் தராசு ரோகித் சர்மா பக்கம் சாயத் தொடங்கியுள்ளது.
சேத்தன் சர்மா தலைமை அணித்தேர்வுக்குழு இந்த கேப்டன்சி விவகாரத்தை ‘மிகவும் சென்சிட்டிவ்’ என்று பார்க்கிறது. எனவே இறுதி முடிவு எடுக்கும் முன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரையும் உட்கார வைத்து பேசி விடுவது நல்லது என்று முடிவெடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவிக்கிறது.
Also Read: ரசிகர்களுக்கு ‘பெரிய சர்ப்ரைஸ்’: யுவராஜ் சிங் வீடியோ மெசேஜ்
20 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி கேப்டன்சியை உதறிய போது ஒருநாள் போட்டிகள் குறித்து ஒன்றும் கூறவில்லை, இது தேர்வுக்குழுவுக்கு மெசேஜ் என்று அப்போது சொல்லப்பட்டது, அதாவது முடிந்தால் என்னை ஒருநாள் போட்டிகள் கேப்டன்சியிலிருந்தும் நீக்குங்கள் என்று அதற்கு அர்த்தம் என்றவாறு சில ஊ (ட)கங்கள் வெளியாகின.
இந்தப் பிரச்சனை இருப்பதால் உடனே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணி மட்டும்தான் அறிவிக்கப்படும் போல் தெரிகிறது. ஒரு நாள் அணியில் கேப்டன்சி பிரச்சனை இருப்பதால் ஒரு நாள் அணியை பிற்பாடு அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால் ஒருநாள் கேப்டன்சியிலிருந்து கோலியை தூக்க வேண்டிய அவசியமில்லை என்பதே இப்போதைய தேவை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, India vs South Africa 2019, Rohit sharma