கோலியின் இடத்தில் விஜய் சங்கரை களமிறக்கியது யார்? அனல் பறக்கும் ட்விட்டர்!

#NZvIND, 1st T20: Why Rohit sharma sending #VijayShankar To No.3 | விஜய் சங்கர் 18 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உதவியுடன் 27 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Web Desk | news18
Updated: February 7, 2019, 12:30 AM IST
கோலியின் இடத்தில் விஜய் சங்கரை களமிறக்கியது யார்? அனல் பறக்கும் ட்விட்டர்!
ஆல்ரவுண்ட் விஜய் சங்கர். (BCCI)
Web Desk | news18
Updated: February 7, 2019, 12:30 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விராட் கோலியின் இடத்தில் விஜய் சங்கர் களமிறக்கப்பட்டதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதித்தது.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)


இதனையடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் இன்று (பிப்.6) முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Rohit Sharma, ரோகித் சர்மா
ஆட்டமிழந்து வெளியேறும் ரோகித் சர்மா. (ICC)


இந்திய அணியின் பேட்டிங்கின்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், விராட் கோலியின் இடத்தில் களமிறங்கப்பட்டார். அவர், 18 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உதவியுடன் 27 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், விஜய் சங்கரை முதல் வரிசையில் இறங்கியது சரியா, தவறா என ட்விட்டரில் மிகப்பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. அவர் முதல் வரிசையில் இறக்கியது மிகப்பெரிய தவறு என்றும், நிதாஹஸ் டிராபி இறுதிப்போட்டியில் எப்படி விளையாடினார் என தெரியும் என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.
Loading...

ஆனால், விஜய் சங்கர் சிறப்பாக விளையாடினார் என்றும், முன்னணி வீரர்களை விட நல்ல ரன்களைச் சேர்ந்துள்ளார் என்றும் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன், இதற்கு முன், விஜய் சங்கர் நன்றாக விளையாடிய போட்டிகளையும் நினைவு கூர்ந்தனர்.

#NZvINDT20: இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வி!

Also Watch...

First published: February 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...