• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Video: வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய கோலி, தோனி!

Video: வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய கோலி, தோனி!

விராட் கோலி மற்றும் தோனி. (Video Grab)

விராட் கோலி மற்றும் தோனி. (Video Grab)

#Kohli, #Dhoni Celebrates Victory In Different Way | நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #NZvIND

  • News18
  • Last Updated :
  • Share this:
    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்குப்பின் கேப்டன் விராட் கோலி, தோனி உள்ளிட்ட வீரர்கள் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேப்பியர் நகரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் நடைபெற்றது.

    India Vs New Zealand, NZvIND, இந்தியா Vs நியூசிலாந்து
    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு. (BCCI)


    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 157 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Mohammed Shami, முகமது ஷமி
    நியூசிலாந்து தொடக்க வீரர்கள் இருவரையும் கிளீன் போல்டாக்கிய முகமது ஷமி. (BCCI)


    எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

    Ambati Rayudu, Shikar Dhawan, அம்பதி ராயுடு, ஷிகர் தவான்
    நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மகிழ்ச்சியில் பெவிலியன் திரும்பும் அம்பதி ராயுடு மற்றும் ஷிகர் தவான். (ICC)


    இந்நிலையில், போட்டி முடிந்ததும் கேப்டன் விராட் கோலி, தோனி உள்ளிட்ட வீரர்கள் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். ‘ஸெக்வே’ என்று அழைக்கப்படும், தனி நபரால் இயக்கக்கூடிய இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சவாரி செய்து மகிழ்ந்தனர். முதலில் தோனி சவாரி செய்தார். பின்னர், அந்த வாகனத்தை இயக்கிய கோலி, உற்சாகத்தில் நடனமாடிக் கொண்டே பயணித்தார்.



    ஸெக்வே வாகனம், நாம் காலால் கொடுக்கும் அழுத்தத்தைப் பொறுத்து வளைந்து நெளிந்து இயங்கக்கூடியது. இந்த வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    Photos: பவுலிங்கில் மிரட்டி வெற்றி பெற்ற இந்தியா!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: