Home /News /sports /

ரபாடா உட்பட 3 பேர் பவுலிங்கில் ‘சதம்’- செம சாத்து: நியூசிலாந்து 482 ரன்கள் குவிப்பு- மாபெரும் தோல்வியை நோக்கி தென் ஆப்பிரிக்கா

ரபாடா உட்பட 3 பேர் பவுலிங்கில் ‘சதம்’- செம சாத்து: நியூசிலாந்து 482 ரன்கள் குவிப்பு- மாபெரும் தோல்வியை நோக்கி தென் ஆப்பிரிக்கா

8வது டெஸ்ட் சதமெடுத்த ஹென்றி நிகோல்ஸ், வெற்றிப்பாதையில் நியூசிலாந்து

8வது டெஸ்ட் சதமெடுத்த ஹென்றி நிகோல்ஸ், வெற்றிப்பாதையில் நியூசிலாந்து

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து 387 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்ஸில் 11/3 என்று தடுமாறுகிறது.

மேலும் படிக்கவும் ...
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து 387 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா நேற்று மேட் ஹென்றி காட்டு யானை போல் தென் ஆப்பிரிக்கா பேட்டிங்குக்குள் புக 7 விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்கா 90 ஆண்டுகளில் இல்லாத சரிவில் 95 ரன்களுக்குச் சுருண்டது.

நேற்று பவுலிங்கில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேட் ஹென்றி இன்று பேட்டிங்கில் 9வது டவுனில் இறங்கி 68 பந்துகளில் 58 ரன்களை 8 பவுண்டரிகளுடன் விளாசித்தள்ளினார். இவருடன் நின்ற டாம் பிளெண்டல் 138பந்துகளில் 96 ரன்களை விளாசி அதில் 12 பவுண்டரிகளை அள்ளினார். கடைசி விக்கெட்டாக யான்செனிடம் 96-ல் விழுந்தார், ஆனால் இவரும் ஹென்றியும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்காக சாதனையான 94 ரன்களை 96 பந்துகளில் சாத்தி எடுத்தது தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு இன்று நரகமானது.

தென் ஆப்பிரிக்காவும் சும்மா இல்லை 3 பவுலர்கள் சதமெடுத்தனர். ரபாடா 113 ரன்களுக்கு 2 விக்கெட், ஸ்டர்மேன் 124 ரன்களுக்கு 1 விக்கெட். டுவேன் ஆலிவர் 100 ரன்களுக்கு 3 விக்கெட், யான்சென் 4 ரன்களில் சதத்தை தவற விட்டு 96 ரன்களுக்கு 2 விக்கெட்.

இந்திய அணியை வீழ்த்திய பிறகே உயர்வு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி இன்னும் பின்னடைவையே கண்டுள்ளது, மொத்தம் ஒரு 10 கேட்சையாவது விட்டிருப்பார்கள், கடைசியாகக் கூட சவுதிக்கு ஒரே ஓவரில் 2 கேட்ச்கள் டிராப். பவுலிங்கில் எந்த ஒரு திட்டமும் இல்லை, நியூசிலாந்து பேட்டர்கள் போட்டு சாத்தி எடுத்து விட்டனர். மாறாக வங்கதேசத்திடம் தோற்ற நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இப்படி ஆடுவது ஆச்சரியமே.

கடைசி 11 இன்னிங்ஸ்களில் இதுவரை பெரிதாக சோபிக்காத நியூசிலாந்து பேட்டர் ஹென்றி நிகோலஸ் 163 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். இது இவரது 8வது டெஸ்ட் சதமாகும். இரவுக்காவலனாக இறங்கிய பவுலர் நீல் வாக்னர் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 49 ரன்கள் வெளுத்து வாங்கினார். டாம் பிளெண்டல் 68 ரன்களுடன் இன்னும் களத்தில் நிற்கிறார். கொலின் டி கிராண்ட் ஹோம் 42 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 45 என்று அடித்து நொறுக்கினார். இது போதாதென்று உதிரிகள் வகையில் ஒரு 35 சேர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் ரபாடா, யான்சென், ஆலிவியர் அடங்கிய பவுலிங் குழுவுக்கு செம சாத்து விழுந்து ஓவருக்கு 5.49 ரன்கள் வீதத்தில் குவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி முதல் 2 மணி நேர ஆட்டத்தில் 119 ரன்களைக் குவித்தது, உணவு இடைவேளைக்குப் பிறகு 121 ரன்களைக் குவித்தது. நீல் வாக்னர், ரபாடாவையும் புதிய பவுலர் கிளெண்டன் ஸ்டர்மேனையும் போட்டு பின்னி எடுத்து விட்டார். கடைசியில் ரபாடாவை பிளிக்கில் சிக்ஸ் அடிக்கப்போய்தான் வாக்னர் டீப்பில் கேட்ச் ஆனார்.

மார்க்ரம் 2வது புதிய பந்தில் வந்து 2 விக்கெட்டுகளை எடுத்தார் என்றால் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சை நியூசிலாந்து வீரர்கள் என்ன வாங்கு வாங்கியுள்ளனர் என்பது புரியும். தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் ரபாடா சதமெடுத்து விட்டார். ஓவருக்கு 3.76 என்ற வீதத்தில் அவர் ரன்களை வாரி வழங்கினார். ஸ்டர்மேன் ஓவருக்கு 4.27ரன்கள் வீதத்தில் கொடுத்தார். யான்சென் கொஞ்சம் பரவாயில்லை 3;21 என்ற வீதத்தில் கொடுத்தார். ஆனால் டுவேன் ஆலிவர் ஓவருக்கு 4.76 என்று சாத்துமுறை வாங்கினார்.

தென் ஆப்பிரிக்கா தன் 2வது இன்னிங்ஸை தொடங்கி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெரிய இன்னிங்ஸ் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
Published by:Muthukumar
First published:

Tags: First test cricket match, New Zealand, South Africa, Test cricket

அடுத்த செய்தி