இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரும் உலகம் கண்டிராத சிறந்த வேகப்பந்து வீச்சு ஜோடியாவர், இருவரும் சேர்ந்து 1000த்திற்கும் கூடுதலான விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக எடுத்துக் கொடுத்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிக உயர்ந்த மட்டத்தில் ஆடிய பிறகும், இருவரும் இன்னும் வலுவாக இருக்கிறார்கள், வயதான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. 39 வயதான ஆண்டர்சன் இங்கிலாந்து வீரராக தனது 19வது ஆண்டில் இருக்கும் வேளையில் பிராட் 16 வருடங்களை முடித்துள்ளார்.
மீண்டும் நியூசிலாந்துக்கு எதிராக இவர்கள் இருவரையும் நேற்று பார்த்தப்போது பலரும் இதென்ன கலாட்டா, இவர்கள் வயதானாலும் தாத்தாக் குச்சி வைத்துக் கொண்டு ஆடுவார்கள் போலிருக்கிறதே என்று தோன்றியது. அதே உணர்வில்தான் கரீபியன் பிரீமியர் லீக் டி20 அணியான பார்படாஸ் ராயல்ஸ் அணி தன் ட்விட்டர் பக்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் 2053 வரை ஆடினால் எந்தத் தோற்றத்தில் இருப்பார்கள் என்று வடிவமைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளத அதோடு பெரிய லெஜண்ட்கள் என்று பாராட்டியும் உள்ளது.
Year 2053 and these two will still be troubling batters! 😂
Absolute legends. 🤌👏#ENGvNZ pic.twitter.com/mvG5XjuK0h
— Barbados Royals (@BarbadosRoyals) June 2, 2022
இவர்கள் 2053 வரையிலும் கூட வயதாகி ஆடி பேட்டர்களை பிரச்சனை செய்வார்களோ என்று பார்படாஸ் ராயல்ஸ் கிண்டல் செய்தாலும் அந்தக் கிண்டலிலும் ஒரு இருண்மை உள்ளது, காரணம் இவர்கள் இன்னும் 30 ஆண்டுகள் ஆடுவார்கள் என்பது ஒரு கிண்டல் என்றால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மீதான கிண்டல் என்றால், இவர்கள் அந்த வயதிலும் பேட்டர்களை படுத்துவார்கள் என்பது வருங்கால பேட்டர்கள் மீதான செம கிண்டலாகவும் அர்த்தம் கொள்கிறது.
39 வயதான லங்காஷயர் கிரிக்கெட் வீரர் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 170 போட்டிகளில் விளையாடி 644 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
வியாழன் அன்று, ஆண்டர்சன் 16 ஓவர்களில் 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளுடன் முதல் இன்னிங்ஸை முடித்தார், அதே நேரத்தில் பிராட் டெவன் கான்வேயை வெளியேற்றினார். நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 132 ரன்களுக்கு எதிராக இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்துள்ளது, இன்று 2ம் நாள் ஆட்டம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England test, James anderson