ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ரன் எடுக்க வாய்ப்பே தரவில்லை’ – இந்திய அணியின் 2 பவுலர்களை பாராட்டும் நியூசிலாந்து கேப்டன்

‘ரன் எடுக்க வாய்ப்பே தரவில்லை’ – இந்திய அணியின் 2 பவுலர்களை பாராட்டும் நியூசிலாந்து கேப்டன்

நியூசிலாந்துக்கு  எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பவுலர்கள் முழு ஆதிக்கத்தை செலுத்தினார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பவுலர்கள் முழு ஆதிக்கத்தை செலுத்தினார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பவுலர்கள் முழு ஆதிக்கத்தை செலுத்தினார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய பவுலர்கள் 2 பேர் ரன் எடுக்க வாய்ப்பே தரவில்லை என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறியுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றுள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 350 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய அவர்கள் 337 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தனர். இருப்பினும் நியூசிலாந்து அணி வீரர்களின் பேட்டிங் கவனத்தையும், பாராட்டையும் பெற்றது. ஆனால் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பவுலர்கள் முழு ஆதிக்கத்தை செலுத்தினார்கள். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 15 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் தாமதம் கூறியதாவது- இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் தரமாக உள்ளனர். நிச்சயமாக சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் மிகச்சிறந்த பவுலர்கள். லைன் மற்றும் லெங்த்தில் மிகத்துல்லியமாக அவர்கள் பந்து வீசினர். நாங்கள் ரன் எடுப்பதற்கு அவர்கள் எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. என்று கூறியுள்ளார். 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. சமி 6 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். சிராஜ் 6 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 6 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் மூன்று ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket