ஊழல் சர்ச்சை: அடுத்தடுத்து நீக்கப்படும் இலங்கை வீரர்கள்.. சர்வதேச கிரிக்கெட் பரபரப்பு!

நுவன் ஸோய்சா - அவிஷ்கா குணவர்தனே. (ICC)

#NuwanZoysa, #AvishkaGunawardene suspended for corrupt practices in #T10league | ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. #ICC

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஊழல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருவதால் சர்வதேச கிரிக்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி-10 லீக் கிரிக்கெட் தொடரில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மேற்பார்வையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊழல் தடுப்பு பிரிவு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

  சில மாதங்களுக்கு முன்பு, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி சனத் ஜெயசூரியா 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கான செயல்களில் ஈடுபட ஐசிசி தடை விதித்தது.

  Sanath Jayasuriya, சனத் ஜெயசூரியா
  இலங்கை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சனத் ஜெயசூரியா. (ICC)


  இதனை அடுத்து, ஊழல் புகாரில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான தில்கரா நீக்கப்பட்டார்.

  இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான நுவன் ஸோய்சா மற்றும் அவிஷ்கா குணவர்தனே ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.  ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  கவுதம் காம்பீர் அப்படிப்பட்டவர் இல்லை... ஹர்பஜன் சிங், விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆதரவு!

  இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்... குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தேர்வாக வாய்ப்பு!

  ஆஸி. வீரர்களை மோசமாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்கள்... வைரலாகும் ட்வீட்கள்!

  2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா? இன்று டெல்லியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே!

  நோன்பு இருந்தபோதும் விளையாடிய ஐ.பி.எல் வீரர்கள்... சீக்ரெட் உடைத்த ஷிகர் தவான்!

  #IPLQualifier2: வேட்டைக்குத் தயாராகும் கர்ஜிக்கும் சிங்கங்கள்!

  VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

  VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

  இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

  Also Watch...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Murugesan L
  First published: