தயவு செய்து தோனியுடன் ரிஷப் பண்ட்-ஐ ஒப்பிடாதீர்கள்: ஷிகர் தவான்

Not right to compare #RishabhPant with #MSDhoni - #ShikharDhawan | பெரிய இலக்கு நிர்ணயித்து இந்திய அணி தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். #INDvAUS

தயவு செய்து தோனியுடன் ரிஷப் பண்ட்-ஐ ஒப்பிடாதீர்கள்: ஷிகர் தவான்
ரிஷப் பண்ட் மற்றும் தோனி. (BCCI)
  • News18
  • Last Updated: March 11, 2019, 7:47 PM IST
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனியுடன், இளம் வீரர் ரிஷப் பண்ட-ஐ ஒப்பிடுவது சரியாக இருக்காது என தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஷிகர் தவான் 143 ரன்கள் விளாசினார்.

Shikhar Dhawan, ஷிகர் தவான்
சதம் அடித்த ஷிகர் தவான். (BCCI)இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்து இந்திய அணி தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் மற்றும் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நிறைய விக்கெட்டுகளையும், ரன்களை தாரை வார்த்தார். இவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Rishabh Pant, ரிஷப் பண்ட்
ரன்அவுட்டை கோட்டைவிட்ட ரிஷப் பண்ட். (Twitter)
இந்நிலையில், போட்டி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஷிகர் தவான், “சதம் அடித்தது திருப்தியாக இருந்தது. ஆனாலும், அணி தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. ரிஷப் பண்ட் சில தவறுகளைச் செய்தார். தவறை திருத்திக்கொள்ள அவருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இளம் வீரர் ரிஷப் பண்ட்-ஐ நிறைய போட்டிகள் விளையாடிய அனுபவம் வாய்ந்த தோனியுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது” என்று கூறினார்.

Shikhar Dhawan, ஷிகர் தவான்
செய்தியாளர் சந்திப்பில் ஷிகர் தவான். (Twitter)


இரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நாளை மறுநாள் (மார்ச் 13) டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது.

Photos: பத்ம விருதுகள் பெற்ற விளையாட்டு பிரபலங்கள்!

விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

Also Watch...

First published: March 11, 2019, 7:47 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading