Bully-ன்னு எந்த இந்திய அணியைச் சொல்றீங்க? முந்தைய இந்திய அணிகளை கேலி பேசிய நாசர் ஹுசைன்: சுனில் கவாஸ்கர் காரசார பதிலடி

சுனில் கவாஸ்கர்

இந்தியா-இங்கிலாந்து தொடரில் களத்தில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெறுகிறது என்றால் வர்ணனையிலும் இருதரப்பினரும் காரசார விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

  • Share this:
    இந்தியா-இங்கிலாந்து தொடரில் களத்தில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெறுகிறது என்றால் வர்ணனையிலும் இருதரப்பினரும் காரசார விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர், அதுவும் சுனில் கவாஸ்கர் ஒரு கண்டிப்பான இந்திய தேசியவாதி, அவரிடம் கடந்த இந்திய அணிகளை கேலி செய்யுமாறு ஒரு கருத்து உதிர்ப்பை நாசர் ஹுசைன் மேற்கொள்ள கவாஸ்கர் அதற்கு கடுமையான பதிலை மறுதலிப்பாக அளித்தார்.

    நாசர் ஹுசைன் தன் பத்தி ஒன்றில் எழுதிய போது இந்த இந்திய அணி கடந்த தலைமுறை இந்திய அணியைப் போல் அவ்வளவு எளிதில் எதிராளிகளால் பந்தாட முடியாத அணி, முந்தைய தலைமுறை இந்திய அணியை எளிதில் எதிரணியினர் பந்தாடி விடுவார்கள், வார்த்தை மோதலாக இருந்தாலும் களத்தில் ஆட்டமாக இருந்தாலும் முந்தைய தலைமுறை இந்திய அணி போன்று பலவீனமானது கிடையாது இந்த இந்திய அணி என்று நாசர் ஹுசைன் எழுதப்போக சுனில் கவாஸ்கர் கடுப்பாகி விட்டார்.

    இது தொடர்பாக வரணனையின் போது சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பினார். அதாவது முந்தைய தலைமுறையைச் சேர்ந்த நாசர் ஹுசைன் நீங்கள் எந்த இந்திய அணியைச் சொல்கிறீர்கள் எந்த இந்திய அணியை எதிரணியினர் எளிதில் வாய்ஜாலம் காட்டி கேலி பேசி அமிழ்த்தி விட்டனர்? புல்லி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள் அப்படி என்றால் என்ன அர்த்தம்? என்று கவாஸ்கர் கேட்டார்.

    கவாஸ்கர் தான் பின் வாங்கப்போவதில்லை என்று இந்த விவகாரத்தில் இருக்கிறார், “நான் பின் வாங்க மாட்டேன், இப்போது கூட நான் என் நிலைப்பாட்டில் திடமாக இருக்கிறேன். என்னை அறிந்தவர்களுக்கு நான் எப்படிப் பட்டவன் என்பது தெரியும்.

    முந்தைய தலைமுறை அணியும் எதிரணியினரிடம் அவ்வளவு எளிதில் மடிந்ததில்லை. கடுமையாக போராடுவோம், வெற்றிக்கு அருகில் வந்திருக்கிறோம், நெருக்கடி கொடுத்திருக்கிறோம்.

    நாசர் ஹுசைன் கவாஸ்கருக்குப் பதில் அளிக்கையில், “இதற்கு முந்தைய இந்திய அணிகள் எதிரணியினரின் ஆக்ரோஷத்துக்கு பதிலளிக்காமல் ஒதுங்கி விடுவார்கள், ஆனால் கோலி இரு மடங்கு திருப்பிக் கொடுக்கிறார்.

    கங்குலியிடம் கொஞ்சம் பார்த்திருக்கிறேன், விராட் கோலி அதைத் தொடர்கிறார். விராட் இல்லாத போதும் ரகானே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடுமையாக ஆடினார்.” என்றார் ஹுசைன்.

    இதனை கவாஸ்கர் ஏற்கவில்லை எந்த முந்தைய தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வினையாற்றாமல் மடிந்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார். “நீங்கள் கூறுவது எனக்கு காயத்தை ஏற்படுத்துகிறது, எந்த முந்தைய தலைமுறை இந்திய அணி அப்படியே சரணடைந்திருக்கிறது? ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள் 1971ல் நான் முதன் முதலாக இங்கிலாந்துக்கு வருகிறேன், இந்தியா தொடரை 1-0 என்று வென்றது.

    1974-ல் எங்கள் அணிக்குள் பிரச்சனை இருந்தது தொடரை 3-0 என்று இழந்தோம். 1979 தொடரில் 1-0 என்று இழந்தோம், ஆனால் ஓவலில் 438 ரன்கள் இலக்கை விரட்டி 9 ரன்கள் குறைவாக 429/8 என்று போட்டி ட்ரா ஆனது, அதை வென்றிருந்தால் தொடர் 1-1 என்று சமன் ஆகியிருக்கும். 1982-ல் மீண்டும் 1-0 என்று இழந்தோம். 1986-ல் 2-0 என்று வென்றோம். அதிலும் கூட 3-0 என்று வென்றிருக்கிறோம். ஆகவே எங்கள் காலக்கட்டத்தில் எதிரணியினரிடம் நாங்கள் சரணடைந்தோம் என்பது மிக மிகத் தவறான கருத்து நாசர் ஹுசைன் என்று சண்டைக்குப் போய்விட்டார் கவாஸ்கர்.

    இப்போது முன்னாள் வீரர் மைக் ஆத்தர்டன் இருவருக்குமிடையே சமாதானம் செய்து வைத்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published: