முகப்பு /செய்தி /விளையாட்டு / தோனியை ஆதரித்த அளவுக்கு கிரேட் பிளேயர்களான சேவாக், கம்பீரை நிர்வாகம் ஆதரிக்கவில்லை -யுவராஜ் சிங்

தோனியை ஆதரித்த அளவுக்கு கிரேட் பிளேயர்களான சேவாக், கம்பீரை நிர்வாகம் ஆதரிக்கவில்லை -யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

கேப்டன் விராட் கோலி, அணி நிர்வாகம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆதரவு இருந்ததால் தான் தோனி 2019 உலகக்கோப்பை வரை நீடிக்க முடிந்தது, இதே ஆதரவு மற்ற வீரர்களுக்கு ஏன் கிரேட் பிளேயர்களுக்குக் கூட கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கேப்டன் விராட் கோலி, அணி நிர்வாகம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆதரவு இருந்ததால் தான் தோனி 2019 உலகக்கோப்பை வரை நீடிக்க முடிந்தது, இதே ஆதரவு மற்ற வீரர்களுக்கு ஏன் கிரேட் பிளேயர்களுக்குக் கூட கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ஹோம் ஆஃப் ஹீரோஸ் என்ற ஸ்போர்ட்ஸ் 18 சேனலுக்கான நேர்காணலில் கோச் மற்றும் கேப்டனின் நிபந்தனையற்ற ஆதரவுக்கு நன்றி, தோனி 350 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடினார் என்றார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் கூறும்போது, “நிச்சயமாக, கேப்டன், கோச் சப்போர்ட் இருந்தால் அது உதவிகரமாகவே இருக்கும். உதாரணமாக தோனியின் கரியர் முடிவு காலத்தை பாருங்கள் புரியும். தோனிக்கு விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் சப்போர்ட் பெரிய அளவில் இருந்தது. இவர்கள்தான் தோனியை உலகக்கோப்பைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி வரை ஆடினார், 350 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை ஆடினார்.

எனவே சப்போர்ட் என்பது மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் இது போன்ற ஒரு சப்போர்ட் அனைவருக்கும் கிடைத்ததில்லை.

ஹர்பஜன் சிங், விரேந்திர சேவாக், லஷ்மண், கம்பீர் போன்ற கிரேட் பிளேயர்களுக்கு இத்தகைய சப்போர்ட் கிடைத்ததா என்றால் இல்லை. உங்கள் தலை மேல் கத்தி தொங்கும்போது நீங்கள் எப்படி சிறப்பாக பேட்டிங்கோ பவுலிங்கோ செய்ய முடியும்? ஆனால் இது சரியாக ஆட முடியாததற்கான சாக்கு போக்கு இல்லை, ஆனால் பலதரப்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் 2011 உலகக்கோப்பைக்குப் பிறகான காலமே வேறாக மாறிப்போயிருந்ததே காரணம்.” என்றார் யுவராஜ் சிங்.

இது தெரிந்த விஷயம்தான். ஏற்கெனவே கம்பீர், ஹர்பஜன் சிங், சேவாக் உள்ளிட்டோர் இந்தக் கருத்தை தெரிவித்ததுதான், மொஹீந்தர் அமர்நாத் செலக்டராக இருந்த போது தோனியை கேப்டன்சியை விட்டுத் தூக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது அப்போதைய பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன் அதை நிறுத்தியதாக அவரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள் கட்டுரையிலும் புத்தகத்திலும் கூட வணிக காரணங்களுக்காகவேயன்றி கிரிக்கெட் காரணங்களுக்காக தோனி அணியில் தக்கவைக்கப்படவில்லை என்பதை எழுதியுள்ளனர்.

First published:

Tags: Cricket, IPL 2022, MS Dhoni, Yuvraj singh