HOME»NEWS»SPORTS»cricket not coronavirus top trending query on google search this year vjr

கொரோனாவை பின்னுக்கு தள்ளி இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வு இது தான்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த தில் பெச்சாரா (Dil Bechara) திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.

கொரோனாவை பின்னுக்கு தள்ளி இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வு இது தான்
கூகுள்
  • Share this:

கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்தாலும் கூகுள் தேடலில் முதலிடத்தை பிடிக்கவில்லை. அதற்கு மாற்றாக ஐ.பி.எல் தான் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டிரெண்டிங்காக மாறி உள்ளது.

கூகுளில் 2020-ம் ஆண்டிற்கான அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள் இன்று அறிவிக்ப்பட்டது. அதில் ஐபிஎல் முதலிடம் பெற்று மீண்டும் விளையாட்டு உலகில் தன்னை நிலைநாட்டி உள்ளது. கடந்த வருடம் ஐசிசி உலகக்கோப்பை தொடர் அதிகம் தேடப்பட்ட நிகழ்வாக இருந்த போது மீண்டும் கிரிக்கெட் சார்ந்த போட்டியே தற்போதும் முதலிடம் பிடித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து கொரோனா வைரஸ், அமெரிக்க அதிரபர் தேர்தல் முடிவுகள், பிரதமர் கிஷான் திட்டம், பீகார் தேர்தல் முடிவுகள் மற்றும் டெல்லி தேர்தல் முடிவுகள் உச்சத்தில் இருந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐ.பி.எல் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் 10-ம் தேதி நிறைவு பெற்றது. கடந்த வருடத்தை விட 28 சதவீதம் ஐ.பி.எல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்ப்பட்டிருந்தது.



நிர்பயா வழக்கு, லாக்டவுன், இந்திய - சீனா விவகாரம், ராமர் கோயில் திறப்பு, சுஷாந்த் சிங் மரணம் உள்ளிட்ட செய்திகளை அதிகம் பேர் கூகுளில் தேடி படித்துள்ளனர். தென் கொரிய தலைவர் கிம் ஜாங் உன், பாலிவுட் நடிகர் அமிதாப் பக்சன், நடிகை கங்கனா, ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கூகுள் தேடலின் டிரெண்டிங்கில் இருந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த தில் பெச்சாரா (Dil Bechara) திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து சூர்யா நடித்த சூரரைப் போற்று உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்த இடத்தில் உள்ளன.

அதேப் போன்று எப்படி (how to) என்ற வார்த்தையும் அதிக முறை கூகுளில் தேடப்பட்டுள்ளது. பன்னீர் செய்வது எப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி, டல்கோனா காபி தயாரிப்பது எப்படி என்ற தேடல்களும் அதிகம் தேடப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

 
Published by:Vijay R
First published: