Home /News /sports /

ரோஹித், கோலி, ராகுல் தங்கள் செல்வாக்கினால் நீடிக்கக்கூடாது- கபில் தேவ்

ரோஹித், கோலி, ராகுல் தங்கள் செல்வாக்கினால் நீடிக்கக்கூடாது- கபில் தேவ்

ராகுல் ரோஹித் கோலி

ராகுல் ரோஹித் கோலி

ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற ஸ்டார் பிளேயர்கள் தங்கள் செல்வாக்கினால் அணியில் நீடிக்கக் கூடாது, அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றவில்லை எனில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற ஸ்டார் பிளேயர்கள் தங்கள் செல்வாக்கினால் அணியில் நீடிக்கக் கூடாது, அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றவில்லை எனில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி டெல்லியில் 9ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது, சர்வதேச போட்டி வேறு, ஜாலி ஐபிஎல் போட்டிகள் வேறு. பிக்பாசில் நடிப்பதற்கும் உண்மையான திரைப்படத்தில் நடிப்பதற்குமான வேறுபாடு போன்றதுதான்.

    தென் ஆப்பிரிக்க அணி நம்மை அவர்கள் நாட்டில் பந்தாடினர், இப்போது இந்திய அணியின் முறை. கே.எல்.ராகுல் அவ்வளவு ஆக்ரோஷமான கேப்டன் அல்ல, கொஞ்சம் சாஃப்ட் பேர்வழி, எனவே இந்தத் தொடரில் அவர் எப்படி செய்கிறார் என்பதைப் பொறுத்தே கேப்டனாக அவரது எதிர்காலம் முடிவு செய்யப்படும்.

    இந்நிலையில் கபில்தேவ் கூறும்போது, “கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் இந்தச் செல்வாக்குத்தான் அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாகிறது. டி20 கிரிக்கெட்டில் துணிச்சலாக ஆட வேண்டும்.

    இவர்கள் மட்டும் தங்கள் ஆட்டத்தை ஆடினால் 150, 160 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவிப்பார்கள். ஆனால் இவர்கள் எப்போது இந்திய அணிக்கு ரன்கள் தேவைப்படுகிறதோ அப்போது ஆட்டமிழந்து விடுகின்றனர். இதனால் மற்ற வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு அவர்களும் சரியாக ஆட முடியாமல் போகிறது.

    ராகுல் 20 ஓவர்கள் நின்று ஆட வேண்டும் என்று யாரோ சொல்கிறார்கள் என்று கடைசி வரை நின்று வெறும் 60 ரன்கள்தான் எடுக்கிறார் என்றால் அதனால் என்ன பயன்? அப்படி ஆடுவதை கடைசி வரை நின்றார் என்று நியாயப்படுத்த முடியாது. சூழ்நிலைக்கேற்ப அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.

    அப்படி இவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாமல் செல்வாக்கினால் அணியில் நீடித்தால், இவர்களை டி20 அணியிலிருந்து நீக்கி புதிய வீரர்களைச் சேர்க்க வேண்டும். ஏனெனில் சிறந்த வீரர்கள் என்ற பழைய செல்வாக்கிலேயே ஓட்ட முடியாது. சிறப்பாக ஆடினால்தான் அணியில் நீடிக்க வேண்டும்” இவ்வாறு கூறினார் கபில் தேவ்.

    கபில்தேவ் கூற வருவதில் முக்கியமானது, இவர்களால் புதிய வீரர்களுக்கு போட்டியில் நெருக்கடி ஏற்பட்டால் புதிய வீரர்கள்தான் நீக்கப்படுகின்றனர், இவர்கள் செல்வாக்கினால் அணியில் நீடிக்கின்றனர், இது கூடாது என்பதுதான் கபிலின் கவலை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India captain Rohit Sharma, Kl rahul, Virat Kohli

    அடுத்த செய்தி