பாஜக யுவ மோர்ச்சா கூட்டத்தில் நான் பங்கேற்கிறேனா?- ராகுல் திராவிட் காட்டமான மறுப்பு
பாஜக யுவ மோர்ச்சா கூட்டத்தில் நான் பங்கேற்கிறேனா?- ராகுல் திராவிட் காட்டமான மறுப்பு
ராகுல் திராவிட்
இமாச்சலப் பிரதேச மாநில தேர்தலை ஒட்டி பாரதிய ஜனதா கட்சியின் (BJP) யுவ மோர்ச்சா கூட்டத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கலந்து கொள்கிறார் என்று எழுந்த செய்திகளை ராகுல் திராவிட் கடுமையாக மறுத்துள்ளார்.

மே மாதம் 12 முதல் அதாவது நாளை முதல் 15ம் தேதி வரை இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக யுவ மோர்ச்சா மீட்டிங் நடைபெறுகிறது, இதில் ராகுல் திராவிட் கலந்து கொள்வதாக ஊடகங்களின் சில பகுதியினர் தெரிவித்தனர்.
இதைக் கடுமையாக மறுத்த ராகுல் திராவிட், “அந்த ரிப்போர்ட்கள் தவறு. ஊடகத்தின் ஒரு பிரிவு நான் இமாச்சலத்தில் மே 12 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் பாஜக யுவ மோர்ச்சா கூட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறேன் என்று செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த ரிப்போர்ட் தவறான செய்தியை அளித்துள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று ராகுல் திராவிட் மறுத்தார்.
இந்தக் குழப்பத்துக்குக் காரணம் என்னவெனில் இமாச்சலப் பிரதேச மாநில தரம்சலா சட்ட மன்ற உறுப்பினர் விஷால் நெஹ்ரியா ராகுல் திராவிட் பாஜக யுவ மோர்ச்சா கூட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறியதையடுத்து இதனை மறுத்து ராகுல் திராவிட் விளக்கம் அளித்துள்ளார் .
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.