வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு கேப்டனுக்கான தகுதியே கிடையாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு கனேரியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் எப்படி பந்து வீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு தெரியவில்லை. கேப்டனுக்கான நுணுக்கமான அறிவு என்று ஷகிபிடம் எதுவும் இல்லை. கேப்டனுக்கான தகுதி அவருக்கு இல்லை என்றே சொல்லலாம்.
ஷகிபை விட லிட்டன் தாஸிற்கு கேப்டனுக்கான பண்புகள் இருக்கின்றன. திறமையாக அவர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியுள்ளார். ஷகிப் குறைவாகவே பந்து வீசியுள்ளார். காலித் அகமது நல்ல பந்து வீச்சாளர். அவரை ஷகிப் ஏன் சரியாக பயன்படுத்தவில்லை?
டி20 போட்டியில் 15 ரன்களுக்கு ஆல் அவுட்… மோசமான சாதனை படைத்த கிரிக்கெட் அணி
தலைமைக்கான பண்பு ஷகிபிடம் இல்லை. அவரை கேப்டனாக ஏற்றுக் கொண்டு விளையாட வங்கதேச வீரர்கள் ஆர்வம் காட்டவில்லை. அவரை விட லிட்டன் தாஸ் சரியான நபராக இருப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இப்படி ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக டேனிஷ் கனேரியா கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 404 ரன்களும், வங்கதேசம் 150 ரன்களும் எடுத்தன.
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இணையும் ரோகித் சர்மா… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கியுள்ளது.
இன்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் இருப்பதால் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket