• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இங்கிலாந்து பி டீமே பாகிஸ்தானை பந்தாடியது, இந்தியாவுடன் ஒப்பிடுவதா?- ரசாக்கிற்கு கனேரியா குட்டு

இங்கிலாந்து பி டீமே பாகிஸ்தானை பந்தாடியது, இந்தியாவுடன் ஒப்பிடுவதா?- ரசாக்கிற்கு கனேரியா குட்டு

டேனிஷ் கனேரியா

டேனிஷ் கனேரியா

பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை இப்போதைய இந்திய அணி நெருங்க முடியாது, திறமையின்படி பாகிஸ்தான் இந்திய அணியை விட பெரியது என்று கிறுக்குத்தனமாக பேச அதற்கு உள்ளிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  • Share this:
    பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை இப்போதைய இந்திய அணி நெருங்க முடியாது, திறமையின்படி பாகிஸ்தான் இந்திய அணியை விட பெரியது என்று கிறுக்குத்தனமாக பேச அதற்கு உள்ளிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    ஆம்! டேனிஷ் கனேரியா என்ற முன்னாள் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னரே அப்துல் ரசாக்கின் இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அக்டோபர் 24ம் தேதி மோதுகின்றனர். இந்நிலையில் ரசாக் வேண்டுமென்றே இந்திய அணியை சீண்டும் விதமாகப் பேசியதைக் கண்டித்த டேனிஷ் கனேரியா, ‘இப்போதைய இந்திய அணியை உங்களால் எட்டிப்பிடிக்க முடியுமா’ என்று சாடியுள்ளார்.

    யூடியூப் சேனலில் டேனிஷ் கனேரியா கூறியது: “பாகிஸ்தான் பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி ஸ்திரத்தன்மையே இல்லை. ரசாக் கூறுகிறார், ரோகித்தையும், கோலியையும் விரைவில் வீழ்த்தினால் இந்திய அணி ஒன்றுமில்லை என்கிறார், இது சுத்த முட்டாள் தனமான கருத்து, இந்த இந்திய அணியை பாகிஸ்தானால் பிடித்து விட முடியுமா?

    பாகிஸ்தான் அணியை உருவாக்குவதிலேயே சிக்கல்கள் உள்ளன. உங்கள் பேட்டிங் எங்கு உள்ளது? யார் உங்களுக்கு போட்டிகளை வெல்லப் போகிறார்கள். இங்கிலாந்து பி டீமே நம்மை தோற்கடித்து விட்டது, இதில் இந்திய அணியோடு ஒப்பீடா? அணித்தேர்வு மோசமாக உள்ளது. இந்நிலையில் இந்திய அணி பற்றி இப்படி ரசாக் பேசுவது மிக மோசமான கருத்து.

    பாகிஸ்தானின் உயர்ந்த மதிப்பில் இருக்கும் ஒரு சர்வதேச வீரர் இப்படிப் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணியின் கை ஓங்கியிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இந்தியா அற்புதமாகத் திகழ்கிறது. சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷப் பந்த், பாண்டியா, இவர்களை உங்களால் வீழ்த்த முடியுமா?

    ரசாக் இந்திய அணி பற்றி கூறியது: டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை இந்தியா ‘டச்’ செய்ய முடியாது- அப்துல் ரசாக்

    இப்போது இல்லை முன்பே கூட பும்ராவைப் பற்றி பேபி பவுலர் என்றார் ரசாக். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸுக்குப் பிறகு யார்க்கர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார் பும்ரா. பும்ராவைக் காட்டிலும் யார்க்கரை செலுத்தும் பவுலர் பாகிஸ்தானில் இல்லை. பும்ராவுக்கு அருகில் கூட யாரும் வர முடியாது. பாகிஸ்தானில் அவருக்கு இணையாக பவுலர் இருக்கிறாரா? இல்லை. ” என்று சாத்தி எடுத்தார்.

    ரசாக் அன்று கூறும்போது, இந்திய அணியை விட பாகிஸ்தான் டேலண்ட் என்றும் கடந்த கால அணியிலும் பாகிஸ்தான் தான் சிறந்தது, அதனால்தான் இந்தியா, பாகிஸ்தானுடன் ஆட எப்போதும் தயங்கும் என்று பிதற்றலிம் உச்சக்கட்டத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: