Home /News /sports /

விராட் கோலியை யாரும் தொட முடியாது - சச்சினுக்கு நிகராகக் கூறும் முன்னாள் வீரர்

விராட் கோலியை யாரும் தொட முடியாது - சச்சினுக்கு நிகராகக் கூறும் முன்னாள் வீரர்

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி vs சச்சின் டெண்டுல்கர் விவாதம் இந்திய கிரிக்கெட்டின் அன்பான ரசிகர்களின் பொழுது போக்கு என்பதை விட வாழ்க்கையாகவே மாறியுள்ளது 5 ந்ட்சத்திர மதுபான விடுதிகள் முதல் சாதாரண டீக்கடை வரை இந்த விவாதம் நடைபெறுவதைப் பார்க்க முடியும். இன்றைய சகாப்தத்தின் சிறந்த வீரர்களுக்கு எதிராக அவரது தலைமுறையின் சிறந்த பேட்டர், டெண்டுல்கருக்கும் கோலிக்கும் இடையில் யார் சிறந்தவர் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

மேலும் படிக்கவும் ...

    புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்க, இருவரும் இந்திய கிரிக்கெட்டின் மாறுபட்ட காலங்களில் விளையாடினர், எனவே இது ஒப்பிடுவதை மிகவும் கடினமாக்குகிறது. இருப்பினும், டெண்டுல்கரின் ஏராளமான பேட்டிங் சாதனைகளை முறியடிப்பது ஒருபுறம் இருக்க, தற்போதைய இந்திய அணியில் இருந்து நெருங்கக்கூடிய ஒரு வீரர் இருக்கிறார் என்றால் அது கோலிதான்.

    டெண்டுல்கரின் 49 சதங்களுடன் ஒப்பிடுவதற்கு கோலிக்கு இன்னும் ஆறு ஒருநாள் போட்டிச் சதங்கள் தேவை. மேலும் 33 வயதில், அவர் 50வது சதம் எடுத்து வந்து மாஸ்டர் பிளாஸ்டரை முந்தவே விரும்புவார்.

    இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமான் கெய்க்வாட், கோலி மீது அபார நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது உடற்தகுதியின் அடிப்படையில், 33 வயதான கோலி, சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்வார் என்கிறார். , ஆனால் ஒரு சாதனை எப்போதும் முறியடிக்கப்பட வாய்ப்பில்லை - நாட்டிற்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அற்புதமான சாதனையை முறியடிப்பது கஷ்டம் என்கிறார் அன்ஷுமன் கெய்க்வாட்.

    “100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இன்னும் அவர் வழியில் செல்வது மிகப்பெரிய சாதனை. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் பெற்ற அனுபவம்தான் பெரிய வித்தியாசம். அவர் ஃபிட்டாக இருக்கும் வரை அவரை யாரும் தொட முடியாது. அவரது உடற்தகுதி குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார், அவர்கள் விளையாடும் தொடர் போட்டிகளின் காரணமாக அவர் 200க்கு சென்றாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் அதாவது, 200க்கு அருகில். அவர் உடல் தகுதியுடன் இருப்பார், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் விளையாடும் வழியில் விளையாடுவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்," என்று நியூஸ்18 க்கு கெய்க்வாட் கூறினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Sachin tendulkar, Virat Kohli

    அடுத்த செய்தி