ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘எந்த வெற்றியும் எளிதில் கிடைத்து விடாது…’ – இந்திய அணியை பாராட்டும் கேப்டன் ராகுல்

‘எந்த வெற்றியும் எளிதில் கிடைத்து விடாது…’ – இந்திய அணியை பாராட்டும் கேப்டன் ராகுல்

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் மிகக்டுமையாக போராடினோம். அனைத்து வீரர்களும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தினார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் எந்த வெற்றியும் எளிதில் கிடைத்து விடாது என்று கூறியுள்ள கேப்டன் கே.எல் .ராகுல் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. தற்போது 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

ஒருநாள் தொடரை இழப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் மிகக்டுமையாக போராடினோம். அனைத்து வீரர்களும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தினார்கள்.

IPL 2023 AUCTION : ஐ.பி.எல். ஏலத்தில் 3 வீரர்களை குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4ஆவது நாளில் பேட்டிங்கிற்கு சாதகமாக மைதானம் இருந்தது. பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை எடுத்தனர். ஆனால் முதல் 3 நாட்களுக்கு மைதானம் ரன்குவிப்பிற்கு சாதகமாக இல்லை. வங்கதேச தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் நாங்கள் இன்னும் கூடுதலாக போராட வேண்டும் என்பதை உணர்ந்தோம்.

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை : 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை

வங்கதேச ஓபனர்களை விட மிகத் தீவிரமாக நாங்கள் ஃபீல்டிங்கிலும், பந்து வீச்சிலும் ஈடுபட்டோம். எந்த வெற்றியும் எளிதில் கிடைத்து விடாது. பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடியதால் அதிக ரன்கள் முன்னிலை பெற்றோம். பவுலர்கள் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை எடுத்தனர். ஒட்டுமொத்தமாக அணியின் கடுமையான முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Kl rahul