இந்தியன் டீம்ல என்ன சேவாகா இருக்காரு? கோலிதானே... பயப்படாதீங்க: இந்திய அணியைப் பார்த்து பீதியில் பேசும் கிரகாம் ஸ்வான்

இந்தியன் டீம்ல என்ன சேவாகா இருக்காரு? கோலிதானே... பயப்படாதீங்க: இந்திய அணியைப் பார்த்து பீதியில் பேசும் கிரகாம் ஸ்வான்

கிரகாம் ஸ்வான்.

இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு ேநராகப் பந்துவீசுவது, மிடில் ஸ்டெம்ப்பை நோக்கி பந்துவீசினாலே போதுமானது.

  • Share this:
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை ஏ-டீமை வைத்து காலி செய்தது ரஹானே படை. ஸ்மித், லபுஷேன், வார்னர், ஹேசில்வுட், கமின்ஸ், லயன், ஸ்டார்க் என்று புலிகளையெல்லாம் அவர்கள் வீட்டிலேயே எலிகளாக்கி இந்திய அணி பஞ்சர் செய்ததைக் கண்டு இங்கிலாந்து அணி ரொம்பவே பயந்து போயுள்ளது.

    அதனால்தான் அந்த அணியின் முன்னாள் ஸ்பின்னர் கிரகாம் ஸ்வான், ‘இப்ப என்ன அங்க சேவாகா இருக்காரு, கோலிதான; பயப்படாதீங்க’ என்று இங்கிலாந்து வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.

    இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஸ்வான் 255 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 60 விக்கெட்டுகள் இந்தியா, இலங்கை வங்கதேச அணிக்கு எதிராக வீழ்த்தியுள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேனுடன் ஒரு கிரி்க்கெட் நிகழ்ச்சியில் ஸ்வான் பேசியதாவது:

    நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் ஃபிளாட்டக இருக்கும் என்பதால், பந்துகள் நன்றாக சுழலும், சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்.

    இந்தியாவுக்கு எதிராக நன்றாகக் கட்டுக்கோப்பாக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் ஜாக் லீச், டாம் பெஸ் பந்துவீசினால், அவர்களும் அந்தப் பந்துவீச்சுக்கு மரியாதை கொடுத்து விளையாடுவார்கள்.

    இந்திய அணியில் தற்போது வீரேந்திர சேவாக் இல்லை. விராட் கோலிதான் இருக்கிறார். விராட் கோலி, சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது, மோசமான பந்து வரும் வரை காத்திருப்பார்.

    இந்தியஅணி மிக, மிக பொறுமையானது. அதே போன்று இங்கிலாந்து அணியும் பொறுமையாக இருந்து நாள் முழுவதும் பந்துவீசினால், விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அவர்களுக்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அப்போது நீங்கள் உங்களின் பிடிமானத்தை இழந்தாலும் அதனால் பராவாயி்ல்லை.

    என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் இடம் பெறுவது இங்கிலாந்து வெற்றியை பிரகாசப்படுத்தும். இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு ேநராகப் பந்துவீசுவது, மிடில் ஸ்டெம்ப்பை நோக்கி பந்துவீசினாலே போதுமானது.

    ஜேக் லீச், டாம் பெஸ், நாள்தோறும் 40 ஓவர்கள் பந்துவீசினால், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களான மார்க் உட், ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட்பிராட் ஆகியோரை மாற்றிப் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு கூறியுள்ளார் கிரகாம் ஸ்வான்.
    Published by:Muthukumar
    First published: