87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு ரஞ்சி தொடர் ரத்து: பிசிசிஐ அறிவிப்பு

87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு ரஞ்சி தொடர் ரத்து: பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட்டில் 87 ஆண்டுகளில் முதல் முறையாக, ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் 87 ஆண்டுகளில் முதல் முறையாக, ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

  • Share this:
    87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான மாநில சங்கங்கள், ரஞ்சி தொடரை நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய் ஹசாரே டிராபி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் போட்டி, மகளிருக்கான 50 ஓவர் போட்டி ஆகியவற்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஞ்சிக் கோப்பைக்கான காலண்டரைத் தயார் செய்வது கடினமாக இருக்கிறது. ஏற்கெனவே நாம் ஏராளமான நாட்களை இழந்துவிட்டோம். இனிமேல் உள்ளூர் போட்டிக்கான காலண்டரைத் தயார் செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக விளையாடுவது அவசியம். ஆனால், அது கடினமான செயல்.

    ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் விளையாடாமல் ஊதியத்தை இழந்த வீரர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா-வின் அம்சங்களை வெளியிட்ட மாருதி சுசுகி!!


    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: