பார்மில் இல்லாத போது ரெஸ்ட் எனும் ‘சொகுசு’ எல்லா வீரர்களுக்கும் கிடைப்பதில்லை - கோலி ரெஸ்ட் பற்றி ஆர்.பி.சிங்
பார்மில் இல்லாத போது ரெஸ்ட் எனும் ‘சொகுசு’ எல்லா வீரர்களுக்கும் கிடைப்பதில்லை - கோலி ரெஸ்ட் பற்றி ஆர்.பி.சிங்
பும்ரா- கோலி
ஃபார்மில் இல்லாத வீரர் ரெஸ்ட் கேட்கலாமா, அப்படி கேட்டால் கொடுத்து விடுவதா? என்று இந்திய முன்னாள் பிரமாதமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கேள்வி எழுப்பியுள்ளார், இந்திய வேகப்பந்து வீச்சின் மாறிவந்த தலைமுறைகளில் பிரதானமானவர் ஆர்.பி.சிங், தோனியின் கேப்டன்சியி 2007 டி20 உலகக்கோப்பையை வென்ற போது ஆர்.பி.சிங் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஆர்.பி.சிங் என்றாலே 2006 திராவிட் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணிதான் நினைவுக்கு வரும், இன்று கண்டபடி உளறிக்கொட்டி வரும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானைக் கேட்டால் தெரியும், ஆர்,பி.சிங், ஜாகீர் கான் டெட்லி காம்பினேஷன் பற்றி. இருவரும் ரவுண்ட் த விக்கெட்டில் வீசினால் கெவின் பீட்டர்சன் உட்பட அனைத்து இங்கிலாந்து வீரர்களும் கிரீசில் டான்ஸ் தான், அதைக் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
ஆனால் இவரெல்லாம் காயமடைந்த போது பிசிசிஐ ஒரு மண்ணும் செய்யவில்லை, அணியை விட்டு தூக்கியதை தவிர. அதைத்தான் இன்று ஸ்டார்களுக்குக் கிடைக்கும் மரியாதை, அந்தஸ்து பற்றி அவரை கேள்வி எழுப்பச் செய்துள்ளது.
ஆங்கில ஆன்லைன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஆர்.பி.சிங் கூறியதாவது:
ஒரு வீரர் தான் சரியாக ஆடாத போது ரெஸ்ட் வேண்டும் என்று கேட்பாரா? ரெஸ்ட் கேட்க மாட்டார் பொதுவாக இப்படித்தான் நடைமுறை. அதிகம் ஆடினால்தான் பார்முக்கு வர முடியும், ரெஸ்ட்டில் எப்படி பார்ம் வரும்? ஆனால் இந்த ரெஸ்ட் எனும் சொகுசு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
நானும் பிராக்யன் ஓஜாவும் இந்திய அணியில் ஆடிய போது ரெஸ்ட் என்ற பேச்சே கிடையாது. ஒன்று அணியில் தேர்வாவோம் இல்லையெனில் நீக்கப்படுவோம் அவ்வளவுதான். 2007 டி20 உலகக்கோப்பைக்கு முன்பு சீனியர் வீரர்கள் கூட ரெஸ்ட் எடுக்கவில்லை. ஏனெனில் டி20 வடிவம் அப்போது புதிது.
கிரிக்கெட் வீரரின் ஆடும் நாட்கள் என்பது குறைவுதான். என்றாவது ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும். விராட் கோலி உண்மையில் காயமடைந்திருந்தால் ரெஸ்ட்டில் தவறில்லை.
என்றார் ஆர்.பி.சிங், இதே போன்றுதான் சுனில் கவாஸ்கரும் பார்மில் இல்லாத வீரருக்கு ரெஸ்ட் என்பது என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இப்போது ஆர்பி சிங் சில வீரர்களுக்குத்தான் இந்த சலுகை மற்றவர்கள் ஒன்று தேர்வாவார்கள் இல்லை நீக்கம் தான் என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.