பிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி

கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டுமென்பதால் இதை நடைமுறைபடுத்தி உள்ளதாக மிஷ்பா தெரிவித்துள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 17, 2019, 3:14 PM IST
பிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி (கோப்பு படம்)
Vijay R | news18-tamil
Updated: September 17, 2019, 3:14 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி, எண்ணெயில் பொறித்த உணவுவகைகள், இனிப்புகள் உள்ளிட்டவை சாப்பிட தடை விதித்துள்ளார் பயிற்சியாளர் மிஷ்பா உல் ஹக்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளராக முன்னாள் வீரர் மிஷ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மிஷ்பா கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதியின் இருக்க அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் வீரர்கள் பிரியாணி, எண்ணெயில் பொறித்த உணவுவகைகள், இனிப்புகள் உள்ளிட்டவை சாப்பிட தடை விதித்துள்ளார்.
மேலும் பார்பிகியூ உணவுவகைகள், பழங்கள் அதிகமாக சாப்பிட அறிவுறுத்தி உள்ளார். கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டுமென்பதால் இதை நடைமுறைபடுத்தி உள்ளதாக மிஷ்பா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் உடல்தகுதியில் அதிக கவனம் செலுத்தவதில்லை. முறையா உடல்தகுதியின் இருக்கும் போது தான் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதை மீறும் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மிஷ்பா எச்சரித்துள்ளார்.
First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...