• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நரைகூடிக் கிழப்பருவம் எய்தி ... வீழ்வேன் என்று நினைத்தாயா?- அபுதாபியில் விளாசிய கிறிஸ் கெய்ல்

நரைகூடிக் கிழப்பருவம் எய்தி ... வீழ்வேன் என்று நினைத்தாயா?- அபுதாபியில் விளாசிய கிறிஸ் கெய்ல்

அபுதாபி அணிக்காக விளாசிய கிறிஸ் கெய்ல் மஞ்சல் உடையில்.

அபுதாபி அணிக்காக விளாசிய கிறிஸ் கெய்ல் மஞ்சல் உடையில்.

  • Share this:
    அபுதாபியில் நேற்று நடைபெற்ற, அணிக்கு10 ஓவர்களுக்கான டி10 கிரிக்கெட் போட்டியில் அபுதாபி அணிக்காக கிறிஸ் கெய்ல் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 49 ரன்கள் விளாசினார். இவரும் அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங்கும் சேர்ந்து 5 ஓவர்களில் 97 ரன்கள் விளாச அபுதாபி அணி பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இதே மைதானத்தில் கிறிஸ் கெயிலின் கடைசி டி20 உலகக்கோப்பை என்று அவருக்கு வழியனுப்பு விழா போன்று சிறப்பிக்கப்பட்டது. உடனே அனைவரும் இதுதான் கெய்லின் கடைசி போட்டி என்று நினைத்தனர். ஆனால் யுனிவர்ஸ் பாஸ் அடுத்த உலகக்கோப்பையும் ஆடுவேன் என்று கூறி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

    பிறகு வியாழனன்று, சூசகமாக ஒரு மெசேஜில் - ஐ யம் நாட் லீவிங் என்று தெரிவித்துள்ளார் கெய்ல். 42 வயதிலும் எந்த ஒரு பந்து வீச்சையும் காலி செய்வேன், அழித்தொழிப்பேன், துவம்சம் செய்வேன் என்ற உறுதி அவரிடம் இன்னமும் இருப்பதுதான் ஆச்சரியம். நம்மூர் தோனியெல்லாம் வயதாக வயதாக சோப்ளாங்கி ஆகி விட போதில் கெய்ல் உண்மையில் ஒரு அதிசயப்பிறவிதான்.

    Also Read: AB de Villers| என் உயிர் இந்த மண்ணை விட்டு பிரியும் போதும் நான் பாதி இந்தியன்- ஏ.பி.டிவிலியர்ஸ் பிரியாவிடை உணர்ச்சிகரம்


    இவரும் அயர்லாந்து வீரர் பால் ஸ்டர்லிங்கும் சேர்ந்து 5 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தனர். இதில் பால் ஸ்டர்லிங் 6 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 23 பந்தில் 59 ரன்களையும் கிறிஸ் கெய்ல் 23 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 49 நாட் அவுட் எனவும் அசத்தினார்கள். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் தான் இதற்கு கேப்டன்.



    எதிரணியான பங்களா டைகர்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஃபாப் டுபிளெசிஸ் ஆவார். ஆனால் டுபிளெசிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். பங்களா டைகர்ஸ் அணி 105 ரன்களுக்கு மடிந்தது. மெர்சண்ட் டீ லாங்கே 5 விக்கெட்டுகளை 2 ஓவர்களில் 23 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: