இஷாந்த் சர்மா, ஜடேஜாவுக்கு இடமில்லை- மீண்டும் சஞ்சய் மஞ்சுரேக்கர்

சஞசய் மஞ்சுரேக்கர்.

சஞ்சய் மஞ்சுரேக்கர் அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் அஸ்வின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துக்கு மொகமட் ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, மொகம்ட் சிராஜ் உள்ளனர். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்வுக்கு இடம் இல்லை.

 • Share this:
  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நாளை ஜூன் 18ம் தேதி இந்தியாவுக்கும்-நியூசிலாந்துக்கும் இடையே தொடங்கவுள்ள நிலையில் அணியில் யார் இருப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு உள்ளது. இந்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் லெவனில் இஷாந்த் சர்மா, ஜடேஜாவுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.

  சஞ்சய் மஞ்சுரேக்கர் அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் அஸ்வின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துக்கு மொகமட் ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, மொகம்ட் சிராஜ் உள்ளனர். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்வுக்கு இடம் இல்லை.

  அதே போல் செம பார்மில் இருக்கும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கும் இடமில்லை. மிடில் ஆர்டர் வரிசையில் சிட்னியில் காயத்துடன் அஸ்வினுடன் சேர்ந்து டிரா செய்த ஹனுமா விஹாரி சஞ்சய் மஞ்சுரேக்கர் அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் உள்ளார்.

  Also Read: யூரோ கோப்பை: லோக்கடெல்லியின் 2 அற்புத கோல்கள்: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இத்தாலி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி

  இந்நிலையில் மஞ்சுரேக்கர் கூறும்போது, “தட்பவெப்ப நிலை, ஆடுகளம் போன்றவற்றுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்துள்ளேன். சிட்னி டெஸ்ட்டில் டிரா செய்த ஹனுமா விஹாரி போன்ற வீரர்கள் அணிக்குத் தேவை. எனவே இவரை பேட்டிங் தரவரிசையில் 6ம் இடத்தில் இறக்கலாம். ரிஷப் பந்த் இவருக்கு அடுத்து களமிறங்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆஸ்திரேலியாவில் சிராஜ் நன்றாக வீசினார். ஸ்விங்குக்குச் சாதகமான இங்கிலாந்திலும் இவர் சாதிப்பார்” என்றார்.

  மஞ்சுரேக்கர் லெவன் வருமாறு:

  விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விகாரி, ரிஷப் பந்த், அஸ்வின், ஷமி, பும்ரா, சிராஜ்.
  Published by:Muthukumar
  First published: