2019 ஐ.பி.எல் போட்டிக்கான தொடக்க விழா ரத்து: திடீர் அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

No #IPL opening ceremony: #BCCI COA Chief #VinodRai | தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. #IPL2019 #NoOpeningCeremony

news18
Updated: February 22, 2019, 4:02 PM IST
2019 ஐ.பி.எல் போட்டிக்கான தொடக்க விழா ரத்து: திடீர் அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐ.பி.எல் கோப்பை (IPL)
news18
Updated: February 22, 2019, 4:02 PM IST
2019 ஐ.பி.எல் போட்டிக்கான தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் நிர்வாகக்குழுத் தலைவர் வினோத் ராய் திடீரென அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணையை இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் கடந்த 19-ம் தேதி (பிப்.19) வெளியிட்டது.

CSK Retentions
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (IPL)


அதன்படி, மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் முதலிரண்டு வாரங்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

IPL 2019 Schedule, ஐ.பி.எல் அட்டவணை
2019 ஐ.பி.எல் அட்டவணை. (IPL)


இந்நிலையில், பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.222) டெல்லியில் நடைபெற்றது. இதில், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகக்குழுத் தலைவர் வினோத் ராய், அடுத்த மாதம் (மார்ச் 23) தொடங்க உள்ள ஐ.பி.எல் டி-20 லீக் கிரிகெட் தொடருக்கான தொடக்க விழா ரத்து செய்யப்படுகிறது என்றும், அதற்காக செலவு செய்யப்படும் பணம், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Loading...
பாகிஸ்தான் போட்டி குறித்து பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட 2 அதிரடி முடிவுகள்!

Also Watch...

First published: February 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...