கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக மாட்டேன் என்று எல்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அதிக நெருக்கடி இருந்தது. இருப்பினும், அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறேன். எனக்கு இன்னமும் நேரம் தேவைப்படுகிறது.
எனது பேட்டிங் பயிற்சியாளர்கள் எனக்கு ஆலோசனைகளை அளித்துள்ளார்கள். எனவே நான் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மீண்டும் தென்னாப்பிரிக்க அணி வெற்றிப் பாதைக்கு திருமபும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2021- ஜூன் மாதத்திலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்திருப்பதால் எல்கர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 2 நாட்களில் முடிந்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள், வல்லுனர்களின் கவனத்தை பெற்றது.
மெல்போர்னில் நடந்த 2ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.
இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த புதன் அன்று தொடங்கி நடைபெற்றது. இந்த டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆன தென்னாப்பிரிக்க அணி நீண்ட போராட்டத்திற்கு பின்னர் டிரா செய்தது.
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர்… இத்தாலியை வீழ்த்தி கோப்பையை வென்றது அமெரிக்க அணி
இந்த போட்டியில் ஒரு நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் போட்டி நடந்திருந்தால் தென்னாப்பிரிக்கா தோல்வியை தவிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, South Africa