Home » News » Sports » CRICKET NO HOPE FOR INDIAN TEAM MARK WAUGH PREDICTS WHITEWASH MUT

இந்திய அணி அவ்வளவுதான்... தேறாது.. ஒயிட்வாஷ்தான்: ஊற்றி மூடிய மார்க் வாஹ், பிராட் ஹேடின்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்குச் சுருண்டு இரண்டரை நாட்களில் டெஸ்ட் போட்டியை இழந்ததையடுத்து இனி இந்தத் தொடரில் இந்திய அணி தேற வாய்ப்பில்லை, 4-0 என்று ஒயிட்வாஷ் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மார்க் வாஹ், பிராட் ஹேடின் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி அவ்வளவுதான்... தேறாது.. ஒயிட்வாஷ்தான்: ஊற்றி மூடிய மார்க் வாஹ், பிராட் ஹேடின்
இந்திய - ஆஸ்திரேலியா தொடர்
  • Cricketnext
  • Last Updated: December 22, 2020, 4:29 PM IST
  • Share this:
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்குச் சுருண்டு இரண்டரை நாட்களில் டெஸ்ட் போட்டியை இழந்ததையடுத்து இனி இந்தத் தொடரில் இந்திய அணி தேற வாய்ப்பில்லை, 4-0 என்று ஒயிட்வாஷ் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மார்க் வாஹ், பிராட் ஹேடின் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வரும் 26ம் தேதி சனிக்கிழமையன்று மெல்போர்னில் 2வது பார்டர்-கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணி விராட் கோலி மற்றும் மொகமது ஷமி இல்லாமல் மிகவும் பலவீனமான அணியாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் மார்க் வாஹ் இடம் இந்திய அணி இந்தத் தொடரில் மீள வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட, அவரோ, “வாய்ப்பேயில்லை, இந்திய அணி அவ்வளவுதான், தேற வாய்ப்பில்லை, தொடர் முழுதையும் இழந்து 4-0 என்று ஒயிட்வாஷ் தோல்விக்கே இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது.


அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி வெற்றி பெற காகிதத்திலாவது ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அந்த டெஸ்ட் போட்டியை 3ம் நாளில் இழந்த பிறகு இந்திய அணி எப்படி மீண்டெழும் என்பது சிக்கல்தான். எனவே இந்தியா மீண்டெழுமா என்று என்னைக் கேட்டால், ‘இல்லை’ ‘வாய்ப்பேயில்லை’ என்பதே என் பதிலாக இருக்கும்” என்று ஊற்றி மூடிவிட்டார் மார்க் வாஹ்.

முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கூறுகையில், “இந்திய அணி மீண்டெழ வேண்டுமென்றால் அதற்கான ஆற்றலை எங்கிருந்து பெறும் என்பதே என் கேள்வி, விராட் கோலியும் இல்லை, அவரது ஆற்றல்தான் அணியையே இட்டுச் செல்கிறது. அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர், கேப்டன்.

அடிலெய்ட் டெஸ்ட் தான் இந்தியாவுக்கு வெற்றி பெற இருக்கும் வாய்ப்பு, அது போய் விட்டது, மெல்போர்ன், சிட்னி இந்திய கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இருக்கும் என்றாலும் அணியில் அத்தகைய உத்வேகமூட்டுபவர்கள் யார் இருக்கிறார்கள், ஆகவே இந்திய அணி மீண்டெழ வாய்ப்பேயில்லை.” என்றார்.
First published: December 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories