விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதியின் பெண் குழந்தை வாமிகாவுக்கு ஒரு வயது நிறைவடைவதையொட்டி விராட் கோலி அதைக்கொண்டாட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இது ரோகித் சர்மா, விராட் கோலியின் இடையே ஏற்பட்டுள்ள ஈகோ மோதலை உறுதி செய்கிறது என்கிறார் முன்னாள் கேப்டன் மொகமட் அசாருதீன்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறிய கருத்தில் ரோகித் சர்மா கோலி தலைமையிலான இந்திய அணியின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியதாக செய்திகள் வந்ததையடுத்து கோலியும் ஒருநாள் தொடரிலிருந்து விடுப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகியது, இது இருவருக்குமிடையேயுள்ள கடும் மோதல் பற்றிய ஊகங்களை உறுதி செய்வதாக அமைகிறது என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது: “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் விளையாடமுடியாததை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கோலி ஓய்வுஎடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால், அதற்கான கால நேரம்தான் சரியில்லை. இருவருக்கும் இடையிலான பிளவு குறித்த ஊகங்களை இந்த செயல் உறுதிசெய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை விட்டுக்கொடுக்காதவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய டெஸ்ட் துணைக் கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக பிரியங்க் பஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதியின் பெண் குழந்தை வாமிகாவுக்கு ஒரு வயது நிறைவடைவதையொட்டி விராட் கோலி அதைக்கொண்டாட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also read: ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரிதிவி ஷா-வுக்கு முன்னரே வர வேண்டிய பிரியங்க் பஞ்சல்- அநீதிகளின் தொடர்கதை
வாமிகா பிறந்தநாளை ஒட்டி அவர் ஜனவரி மாதத்தில் விடுப்பை கழிக்கத் திட்டமிட்டுள்ளர். ஹாலிடே டிரிப் ஒன்றையும் கோலி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 11ம் தேதி வாமிகாவுக்கு ஒரு வயது ஆகிறது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 19ம் தேதி தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.